என் மலர்
நீங்கள் தேடியது "Teenager dies due to electrocution மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு"
- விஜயராஜ் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியார் என்ஜினீயரிங் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.
- இந்த நிலையில், கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளை யத்தில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு நெல் அரவை எந்திரத்தை பொருத்துவதற்காக கடந்த 3-ந் தேதி வந்துள்ளார்.
பரமத்திவேலூர்:
திருவாரூர் மாவட்டம், கிடாரம் கொண்டான் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விஜயராஜ் (வயது 24). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியார் என்ஜினீயரிங் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், திருச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான என்ஜினீயரிங் கம்பெனியில் இருந்து பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே வேட்டுவம்பாளை யத்தில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு நெல் அரவை எந்திரத்தை பொருத்துவதற்காக கடந்த 3-ந் தேதி வந்துள்ளார்.
தொடர்ந்து 3 நாட்களாக வேலை பார்த்து வந்த விஜயராஜ், நேற்று முன்தினம் அரிசி ஆலையில் எந்திரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அவரை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஜயராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ள னர். இதுகுறித்து ஜேடர் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






