என் மலர்
நாமக்கல்
- வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், மோர், தயிர் போன்றவற்றை மக்கள் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மோர், தயிர், இளநீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
- பரமத்திவேலூர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தயிர், மோர் விற்பனை கடைகள் உள்ளது.
பரமத்திவேலூர்:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வெயிலில் இருந்து காத்துக் கொள்ள, உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், மோர், தயிர் போன்றவற்றை மக்கள் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மோர், தயிர், இளநீர் விற்பனை அதிகரித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தயிர், மோர் விற்பனை கடைகள் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சி என்பதால், குடும்பத்துக்கு தேவையான அளவு மோர், தயிரை மக்கள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த வாரம் மோர் ஒரு லிட்டர் ரூ.30-க்கும், தயிர் ஒரு லிட்டர் ரூ.80-க்கும் விற்பனை செய்தனர். இந்த நிலையில் தற்போது மோர் ஒரு லிட்டர் ரூ.40-க்கும், தயிர் ஒரு லிட்டர் ரூ.90-க்கும் விலையை உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இது பற்றி கடை உரிமையாளர்கள் கூறும்போது, கோடை காலம் என்பதால் மோர், தயிர் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது பால் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
மேலும் போக்குவரத்து செலவு, கடை வாடகை, வேலையாட்களின் சம்பளம் ஆகியவையும் உயர்ந்து உள்ளதால், மோர், தயிர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
- அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்து, அடிப்படை பள்ளிக் கல்வியை முடிக்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 6 முதல், 18 வயதுடைய இடைநின்ற, பள்ளி செல்லாக் குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு, சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, 6 முதல் 18 வயது உடைய அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்து, அடிப்படை பள்ளிக் கல்வியை முடிக்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 முதல், 18 வயதுடைய இடைநின்ற, பள்ளி செல்லாக் குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழி லாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு, சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறி வதற்கான, குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணி, ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணி, ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்க ளிலும், நகர்ப்புறங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இக்க ணக்கெடுப்பு பணியில், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், கிராமப்புற சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் பகுதியில், பள்ளி செல்லா, இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணி, நகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டி நரிக்குறவர் காலனியில் மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் மேற்பார்வையில், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் அவசியம், அரசின் திட்டங்கள் குறித்து, பெற்றோர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு, பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து விபரம் சேகரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், மேற்பார்வையாளர் சசிராணி, ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ண லட்சுமி, பெரியப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் பத்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ரேவதி (வயது 21). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.
- கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமு டைந்த ரேவதி, கடந்த மாதம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் சின்னம்மா ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவரது மனைவி ரேவதி (வயது 21). இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமு டைந்த ரேவதி, கடந்த மாதம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த உறவி னர்கள், அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கா மல் நேற்று இரவு ரேவதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
- அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை மாவட்ட வருவாய் அலு லவரிடம் வழங்கினார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுலவலர் மணி மேகலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்களை மாவட்ட வருவாய் அலு லவரிடம் வழங்கினார்கள். மனுக்க ளைப் பெற்ற டி.ஆர்.ஓ, அவற்றை உரிய அலுவலர்க ளிடம் வழங்கி, மனுக்களை விரைந்து பரி சீலனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதி காரிகள் கலந்துகொண்ட னர்.
- தமிழகத்தில் உள்ளூர் கோவில் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
- இந்த நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும். ஒரு சில இடங்களில் அனு மதி பெறாமல், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.
பரமத்திவேலூர்:
தமிழகத்தில் உள்ளூர் கோவில் பண்டிகையின் போது பல்வேறு நிகழ்ச்சிக ளுக்கு ஏற்பாடு செய்யப்படும். கரகாட்டம், நையாண்டி மேளம், ஒயிலாட்டம் மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகள் நடத்து வதற்கு அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் அனுமதி பெறவேண்டும். ஒரு சில இடங்களில் அனு மதி பெறாமல், உள்ளூர் செல்வாக்கை பயன்படுத்தி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்துார் ஊராட்சி செல்லிபாளை யத்தில், மதுரை வீரன் திருவிழா, நேற்று தொடங்கி 2 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து விழா தொடங்குவதற்கு முதல் நாள், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 11 மணி வரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதி பெறவில்லை என தெரிகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் மோகனுார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தங்கவேல், அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்திய கோவில் தர்கர்த்தா மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் இது போன்று அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சுந்தர்ராஜன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- போலீசார் கார்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டநாயக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 60). ஜோதிடரான இவருக்கு பேபி (50) என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர்.
கருத்துவேறுபாடு காரணமாக, சுந்தர்ராஜன் மனைவியை பிரிந்து, அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் சுந்தர்ராஜன் வீட்டில் குடல் சரிந்து, ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சுந்தர்ராஜன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், சுந்தர்ராஜனை கொலை செய்த சேந்தமங்கலம் அருகே சாலையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வெளியான விபரம் வருமாறு:-
மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுந்தர்ராஜனுக்கு, கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தறிபட்டறையில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதே தறிப்பட்டறையில் வேலை செய்யும் கார்த்தியுடனும், அந்த பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் சுந்தர்ராஜனுக்கு சமீபத்தில் தெரியவந்தது. இதை தொடர்ந்து, அந்த பெண்ணையும், கார்த்தியையும் அழைத்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சுந்தர்ராஜன் மிரட்டல் விடுத்தார். இதனால் சுந்தரராஜனுக்கும், அந்த பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி மற்றும் கள்ளக்காதலி ஆகியோர், சுந்தரராஜனை அடித்து உதைக்கும் நோக்கத்தில் கடந்த 9-ந் தேதி அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சுந்தர்ராஜனை வயிற்று பகுதி மற்றும் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த தகவலை கார்த்தி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்து இருப்பதாக போலீசார் கூறினர்.
தொடர்ந்து போலீசார் கார்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆங்கில தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் மாணவர் குளிக்க சென்றார்.
- ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் ஏ.எஸ். பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் இளங்கோ (வயது 15). இவர் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள், மாணவன் உடலை மீட்டனர். இதற்கிடையே அங்கு வந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்வதற்காக பரிசல் நிலையத்தில் வரிசையில் காத்து நின்று டிக்கெட் வாங்கினர்.
- மணல்திட்டு சென்றுவர தனிக்கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பேரம் பேசி வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தமிழகத்தில் கோடை வெயில் அதிக அளவில் நிலவி வருவதால் பொது மக்கள் முதியோர்கள் குழந்தைகள் என அனைவரும் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் தண்ணீர் சூழ்ந்த பகுதிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு சென்று சூட்டை தணிக்கின்றனர்.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் வருவது வழக்கம்.
இந்நிலையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதேபோல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு குவிந்தனர்.
அவர்கள் ஒகேனக்கல்லில் வெப்பத்தை தணிப்பதற்காக, ஆயில் மசாஜ் செய்தும், அங்குள்ள அருவிகளில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
பின்னர் அங்குள்ள மீன் உணவை சுவைத்து உண்டு மகிழ்ந்தனர்.
அப்போது சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்வதற்காக பரிசல் நிலையத்தில் வரிசையில் காத்து நின்று டிக்கெட் வாங்கினர்.
பயணிகள் சிலர் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். அப்போது பயணிகளிடம் மீண்டும் பரிசல் துறைக்கு கொண்டு சென்று இறக்கி விட கூடுதலாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை தரவேண்டும் என்று பரிசல் ஓட்டிகள் பேரம் பேசினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், பரிசல் ஓட்டிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரிய தகராறாக மாறியது.
இதைத்தொடர்ந்து ஒகேனக்கல் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பரிசல் ஓட்டிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பது குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலாபயணிகள் பரிசலில் மாமரத்துமடுவு பரிசல் துறையில் இருந்து ஐந்தருவி, காட்சி கோபுரம் வழியாக மணல்திட்டு வரை செல்லவேண்டும். மீண்டும் மாமரமத்து மடுவு பகுதிக்கு திரும்பி வரவேண்டும். இதற்காக 4 பேருக்கு ரூ.750 அளவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், சுற்றுலா பயணிகளை காலம் கடத்தி காட்சி கோபுரத்தில் இருந்து மணல்திட்டு சென்றுவர தனிக்கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பேரம் பேசி வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் பரிசல் நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளையும் சுற்றி காட்டிய பிறகு மீண்டும் மாமரத்துமடுவு பகுதிக்கு திரும்பி வர பரிசல் ஓட்டிகள் மறைமுகமாக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு, சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப் பெருமானை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமானுக்கு, சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்கள், அருகம்புல் மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகப் பெருமானை, சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகப் பெருமான், மகா மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், பரமத்திவேலூரில் உள்ள ஹேரம்ப பஞ்சமுக விநாயகர், சக்தி நகரில் உள்ள விநாயகர், நல்லியாம்பாளையத்தில் உள்ள விநாயகர், காவிரி பாலம் அருகே உள்ள சத்திரத்து விநாயகர், பாண்டமங்கலத்தில் உள்ள விநாயகர், பிலிக்கல் பாளையம் விநாயகர், வடகரையாத்தூர் விநாயகர், கபிலர்மலை விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சுல்தான்பேட்டையை சேர்ந்த மாரியம்மாள் என்ப வரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
- இதனால் விரக்தியில் இருந்த லோகு, கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக் கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் லோகு (வயது 27). கூலித் தொழிலாளி.
இவர் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த மாரியம்மாள் என்ப வரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் லோகு கூலி வேலைக்கு சென்று விட்டு வரும்போதெல்லாம் மது அருந்திவிட்டு வந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் விரக்தியில் இருந்த லோகு, கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக் கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த மாரியம் மாள், லோகு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு லோகு உயிரிழந்தார்.
இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இன்று மைனஸ் 30 என்ற அளவிற்கு மிகாமல் முட்டை விற்பனை செய்ய வேண்டும்.
- ஈஸ்டர் முடிவடைந்ததால் வரும் நாட்களில் கேரளாவில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து பண்ணையாளர்களும் இன்று மைனஸ் 30 என்ற அளவிற்கு மிகாமல் முட்டை விற்பனை செய்ய வேண்டும்.
அவ்வாறு எவரேனும் 30 பைசாவுக்கு மேல் மைனஸ் கேட்டால் அந்தந்த பகுதி பண்ணையாளர்கள் அவர்களின் பகுதிக்கு உட்பட்ட தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டாரக்குழு தலைவர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
ஈஸ்டர் முடிவடைந்ததால் வரும் நாட்களில் கேரளாவில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களை அனுசரித்து அறிவிக்கப்பட்ட மைனசிற்கு மட்டுமே முட்டைகளை விற்க வேண்டும்.
அனைத்து பண்ணையாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த மைனஸ் என்ற விரும்பத் தகாத ஒன்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
எனவே பண்ணையாளர்கள் அறிவிக்கப்பட்ட மைனசுக்கு மட்டுமே முட்டை விற்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
- சுந்தரராஜன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
- வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகள் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொண்டநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் சுந்தரராஜன் (வயது 60). இவருக்கு பேபி (50) என்ற மனைவியும், நிரேஷ் (33), சிமல் (27) என்ற மகன்களும் உள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, ஜோதிடரின் மனைவி பேபி குடும்ப பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து, மல்லசமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் சுந்தரராஜன் தனிமையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், இன்று காலை வீட்டில் சுந்தரராஜன் வயிற்றில் கத்தி குத்துடன், குடல் சரிந்த நிலையில் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. சுரேஷ், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன், எஸ்.ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். சுந்தரராஜன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. அப்போது, ஜோதிடர் வீட்டிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு கிழக்கு, மேற்கு வீதிகள் வழியாக மோப்ப நாய் ஓடி நின்றது. தொடர்ந்து தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகள் யார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் முன்விரோதம் அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






