என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலை கண்டித்ததால் ஜோதிடரை கொலை செய்தேன்- கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
    X

    கள்ளக்காதலை கண்டித்ததால் ஜோதிடரை கொலை செய்தேன்- கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

    • கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சுந்தர்ராஜன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
    • போலீசார் கார்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டநாயக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 60). ஜோதிடரான இவருக்கு பேபி (50) என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர்.

    கருத்துவேறுபாடு காரணமாக, சுந்தர்ராஜன் மனைவியை பிரிந்து, அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் சுந்தர்ராஜன் வீட்டில் குடல் சரிந்து, ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில், போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சுந்தர்ராஜன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், சுந்தர்ராஜனை கொலை செய்த சேந்தமங்கலம் அருகே சாலையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் வெளியான விபரம் வருமாறு:-

    மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த சுந்தர்ராஜனுக்கு, கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தறிபட்டறையில் வேலை செய்யும் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில், அதே தறிப்பட்டறையில் வேலை செய்யும் கார்த்தியுடனும், அந்த பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் சுந்தர்ராஜனுக்கு சமீபத்தில் தெரியவந்தது. இதை தொடர்ந்து, அந்த பெண்ணையும், கார்த்தியையும் அழைத்து கள்ளத்தொடர்பை கைவிடுமாறு சுந்தர்ராஜன் மிரட்டல் விடுத்தார். இதனால் சுந்தரராஜனுக்கும், அந்த பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி மற்றும் கள்ளக்காதலி ஆகியோர், சுந்தரராஜனை அடித்து உதைக்கும் நோக்கத்தில் கடந்த 9-ந் தேதி அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சுந்தர்ராஜனை வயிற்று பகுதி மற்றும் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இந்த தகவலை கார்த்தி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்து இருப்பதாக போலீசார் கூறினர்.

    தொடர்ந்து போலீசார் கார்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×