என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் ஸ்டாலின், நமது அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத்தந்த அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டா டப்படும் என்று அறிவித்து, சமத்துவ நாள் உறுதிமொழி அனைவரும் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய, அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உறுதி மொழியை வாசித்தார். அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவ சுப்பிரமணியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, கலால்துறை உதவி கமிஷனர் செல்வி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மனைவியும், காவியா, கவின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
    • எதிர்பாராத விதமாக கவின் அந்த கல்குவாரியில் மூழ்கி இறந்துவிட்டான். தீயணைப்பு துறையினர் எனது மகனின் உடலை மீட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த கல்லுக்கட்டியூரை சேர்ந்த கந்தசாமி (வயது 38) என்பவர், நாமக்கல்மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதா வது:-

    நான், குமாரபாளையம் தாலுக்கா, கல்லுக்கட்டியூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறேன். எனக்கு மனைவியும், காவியா, கவின் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    அதில், கவின் படவீடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள சங்கர் மேல்நிலைப் பள்ளி யில், 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 3-ந் தேதி, எனது மகன் கவின் தன்னுடன் படிக்கும் சக மாண வர்களு டன், பச்சாம்பாளை யம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் குளிப்பதற்காக சென்றுள்ளான்.

    எதிர்பாராத விதமாக கவின் அந்த கல்குவாரியில் மூழ்கி இறந்துவிட்டான். தீயணைப்பு துறையினர் எனது மகனின் உடலை மீட்டனர். வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். தினமும் கூலி வேலைக்கு சென்று கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறோம். என் மகன் படித்து, எங்கள் குடும்பத்தின் நிலையை உயர்த்துவான் என நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு, அவனது இறப்பு மிகப்பெரிய இழப்பு.

    அதனால், எங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு வழங்கும் முதல்வரின் நிவா ரண நிதி உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இக்கிராமங்களில் 10 ஏக்க ருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்கள் உள்ள (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது. தகுதியுடைய விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • கபிலர்மலை, வடக்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 57). கபிலர்மலையில் உள்ள கைத்தறி சொசைட்டியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
    • அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ரத்தினவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை, வடக்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 57). கபிலர்மலையில் உள்ள கைத்தறி சொசைட்டியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று நாமக்கல் சென்றுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் கபிலர்மலைக்கு செல்ல பரமத்தியில் இருந்து கபிலர்மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இருக்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ரத்தினவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு மோட்டார் சைக்கிளுடன் தார் சாலையில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோ தனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ள னர்.

    இதுகுறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரத்தினவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது.
    • இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. விழாவில் பக்தர்கள் வேப்பிலை அணிந்து உருளதண்டம் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இக்கோவில் திருவிழாவையொட்டி, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து சிறப்பு நீதிமன்றம் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றும் சிறப்பு நீதிமன்றம் நடந்தது.

    ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரெஹினாபேகம் வழக்குகளை விசாரித்தார். அடி தடி, சிறு விபத்துக்கள், மது விற்பனை போன்ற 7 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதம் விதித்தார். இன்றும் சிறப்பு நீதிமன்றம் நடந்தது.

    • நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நெஸ்பேக் 30 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.80 மட்டுமே கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-435, பர்வாலா-382, பெங்களூர்-410, டெல்லி-400, ஹைதராபாத்-363, மும்பை-420, மைசூர்-410, விஜயவாடா-385, ஹொஸ்பேட்-370, கொல்கத்தா-435.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.92 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 72 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

    • நகராட்சியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
    • விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் பரிசீலித்து செல்லத்தக்கவாறு, உரிமம் வழங்கப்படும்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம் நகராட்சியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 2 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக நிறுவனங்கள், 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. சுற்று சூழலை பாதுகாக்கும் வகையிலும், நகரின் அசுர வளர்ச்சியை கொண்டும், சுகாதாரத்தை பேணும் வகையில், கசடு, கழிவு மேலாண்மையை, முறையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்ய ஏதுவாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 2022-ல் அரசாணை பிறப்பித்துள்ளது.

    அதன் பேரில் நகரில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தல் செய்தல், கசடு, கழிவுகளை கழிவுநீர் வாகனம் மூலம் பாதுகாப்பாக எடுத்து சென்று, இடைப்பாடி நகராட்சி, சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்றுவதற்கு வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி, தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை 15 நாட்களுக்குள் பரிசீலித்து செல்லத்தக்கவாறு, உரிமம் வழங்கப்படும். மேற்படி கழிவுநீர் வாகனத்தை இயக்கும் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இயக்க வேண்டும். உரிமம் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியபட்டால் எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல் நகராட்சியால் பறிமுதல் செய்யப்படும்.

    மேலும் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகள், வணிக நிறுவனங்களில் உள்ள கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கு நகராட்சியில் பதிவு செய்து, உரிமம் பெற்ற கழிவுநீர் வாகன உரிமையாளர்களை அணுகுமாறும், இடைப்பாடி நகராட்சி சுத்திகரிப்பு நிலையத்தில் ஊற்றுவதற்கு நடைக்கு, 200 ரூபாய் கட்டணமாக வீட்டின் உரிமையாளரே செலுத்த வேண்டும்,

    கழிவுநீர் எடுக்கும் போது, நகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஏதேனும் பின் விளைவுகள், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பாக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது மது விற்றதாக தேவூரை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(வயது 27), முருகன்(58), எம்.ஜி.ஆர்.நகர் அருகே ஏகாம்பரம்(55) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • முக்கண் சாய்பாபா மற்றும் வராகி அம்மனுக்கு புதிதாக ஆலயம் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • பணிகள் முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு பஞ்சமி திதியில் மகா கணபதி யாக வேள்வி பூஜை நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் அமைந்துள்ள முக்கண் சாய்பாபா மற்றும் வராகி அம்மனுக்கு புதிதாக ஆலயம் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    பணிகள் முடிந்ததை அடுத்து நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 4 மணிக்கு பஞ்சமி திதியில் மகா கணபதி யாக வேள்வி பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். நேற்று காலை திருமுறை பாராயணம், 2-ம் கால யாக வேள்வி பூஜை நடந்தது.

    காலை 7 மணிக்கு மேல் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 8 மணிக்கு விநாயகர், முக்கண் சாய்பாபா, வராகி அம்மன் ஆலயத்தில் புனித நீரூற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.

    இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர், முக்கண் சாய்பாபா, வராகி அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது என தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிப்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ. 15 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ. 6 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ. 7 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ. 3 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும் கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் ஏலம் போனது.

    இதை குறித்து விவசாயிகள் கூறிகையில், அதிக அளவில் விஷேச நிகழ்ச்சிகள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது என தெரிவித்தனர்.

    • ஆவராங்காடு பகுதியில் வாரந்தோறும் சனி கிழமை சந்தை சுமார் 50 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.
    • சாலையில் இருபுறத்திலும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தற்போது வார சந்தை வளாகத்தில் சுமார் 100 கடைகள், 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் அடுத்த ஆவராங்காடு பகுதியில் வாரந்தோறும் சனி கிழமை சந்தை சுமார் 50 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது.

    இந்த சந்தையில் காய்கறி, பழம், வெங்காயம், பழம்,செருப்பு, துணிகள், பாய், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவராங்காடு சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் தங்கள் விளை பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    சுற்றுவட்டாரத்தை ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்கி செல்வர்கள். சந்தைக்கு வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து விட்டது.

    இதனால் சாலையில் இருபுறத்திலும் நடைபாதையில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கிறார்கள். தற்போது வார சந்தை வளாகத்தில் சுமார் 100 கடைகள், 1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

    நேற்று கடைகள் அமையுள்ள இடத்தை நகராட்சி சேர்மன் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
    • பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் போனது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் போனது.

    விரலி ரகம் 1850 மூட்டைகளும், உருண்டை ரகம் 800 மூட்டைகளும், பணங்காலி ரகம் 50 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4969 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7403-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.4802-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6100-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.8999-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.13000-க்கும் ஏலம் விடப்பட்டது.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×