என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேந்தமங்கலம் அருகே ஜோதிடர் கத்தியால் குத்தி படுகொலை
    X

    சேந்தமங்கலம் அருகே ஜோதிடர் கத்தியால் குத்தி படுகொலை

    • சுந்தரராஜன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
    • வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகள் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொண்டநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் சுந்தரராஜன் (வயது 60). இவருக்கு பேபி (50) என்ற மனைவியும், நிரேஷ் (33), சிமல் (27) என்ற மகன்களும் உள்ளனர்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, ஜோதிடரின் மனைவி பேபி குடும்ப பிரச்சினை காரணமாக அவரை விட்டு பிரிந்து, மல்லசமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் சுந்தரராஜன் தனிமையில் வசித்து வந்தார்.

    இந்நிலையில், இன்று காலை வீட்டில் சுந்தரராஜன் வயிற்றில் கத்தி குத்துடன், குடல் சரிந்த நிலையில் நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து டி.எஸ்.பி. சுரேஷ், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன், எஸ்.ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். சுந்தரராஜன் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் ஸ்டெபி வரவழைக்கப்பட்டது. அப்போது, ஜோதிடர் வீட்டிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு கிழக்கு, மேற்கு வீதிகள் வழியாக மோப்ப நாய் ஓடி நின்றது. தொடர்ந்து தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகள் யார்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் முன்விரோதம் அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×