என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணக்கெடுப்பு தொடக்கம்"

    • அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்து, அடிப்படை பள்ளிக் கல்வியை முடிக்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • 6 முதல், 18 வயதுடைய இடைநின்ற, பள்ளி செல்லாக் குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு, சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, 6 முதல் 18 வயது உடைய அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்து, அடிப்படை பள்ளிக் கல்வியை முடிக்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    6 முதல், 18 வயதுடைய இடைநின்ற, பள்ளி செல்லாக் குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழி லாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு, சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை கண்டறி வதற்கான, குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணி, ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணி, ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்க ளிலும், நகர்ப்புறங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இக்க ணக்கெடுப்பு பணியில், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், கிராமப்புற சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள், பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் மற்றும் கல்வி தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் பகுதியில், பள்ளி செல்லா, இடைநிற்றல் குழந்தைகளை கண்டறியும் பணி, நகராட்சிக்கு உட்பட்ட பெரியப்பட்டி நரிக்குறவர் காலனியில் மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் மேற்பார்வையில், குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் அவசியம், அரசின் திட்டங்கள் குறித்து, பெற்றோர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு, பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து விபரம் சேகரிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், மேற்பார்வையாளர் சசிராணி, ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ண லட்சுமி, பெரியப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் பத்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×