என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    • சுல்தான்பேட்டையை சேர்ந்த மாரியம்மாள் என்ப வரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
    • இதனால் விரக்தியில் இருந்த லோகு, கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக் கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் லோகு (வயது 27). கூலித் தொழிலாளி.

    இவர் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையை சேர்ந்த மாரியம்மாள் என்ப வரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் லோகு கூலி வேலைக்கு சென்று விட்டு வரும்போதெல்லாம் மது அருந்திவிட்டு வந்ததால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் விரக்தியில் இருந்த லோகு, கடந்த 27-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டுக் கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த மாரியம் மாள், லோகு தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு லோகு உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×