என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது.
    • முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 20-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது.

    இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ.5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 20-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நெஸ்பேக் 40 பைசா மைனஸ் விலை அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 3.90 மட்டுமே கிடைக்கும்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:- சென்னை-425, பர்வாலா-352, பெங்களூர்-420, டெல்லி-375, ஹைதராபாத்-358, மும்பை-413, மைசூர்-428, விஜயவாடா-365, ஹொஸ்பேட்-380, கொல்கத்தா-410.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.109 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 ஆக நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

    • வரும் 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.
    • தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் வரும் 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது. தென்னை சாகுபடியில் தற்போது விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    தென்னை ஆயுள் முழுவதும் வருமானம் தரக்கூடிய ஒரு நீண்ட கால பயிர் ஆகும். இதே போல் பாக்கு மர சாகுபடியும் நீண்ட கால நிரந்தர வருவாய் தரக்கூடியதாகும்.

    தென்னை மற்றும் பாக்கு மரங்களில் அவ்வப்போது ஏற்படும் நோய் தாக்குதல்கள் மற்றும் பராமரிப்பு பற்றி விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இந்நிலையில் நாமக்கல் கால்நடை மருத்து வக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 25-ந் தேதி தென்னை மற்றும் பாக்கு சாகுபடி குறிப்புகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மண்பரிசோதனையின் முக்கியத்துவம், நாற்றாங்கால் பராமரிப்பு, ஊட்டச்சத்து, நீர் மற்றும் களை மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்து தெளிவாக விளக்க வுரை அளிக்கப்படும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் - சேலம் ரோட்டில் சண்முகா ஓட்டல் அருகில் முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார், அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
    • 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் (ஐ.டி.ஐ) சேர்க்கை பெற்று, தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களின், தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியா ளர்கள், தங்களது தேசிய தொழிற்சான்றிதழ்களில் பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், போட்டோ, பிறந்த தேதி போன்றவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், பின்வரும் அசல் கல்வி ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களுடன், நாமக்கல் கீரம்பூர், தட்டாங்குட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    தேசிய தொழிற்சான்றி தழ்களில் திருத்தம் செய்ய விரும்புவோர், 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

    மேலும், இது தொடர்பான விபரங்க ளுக்கு, கொண்டி செட்டிப்பட்டியில் உள்ள, மாவட்ட திறன் பயற்சி அலு வலக உதவி இயக்குனரை அணுகி கூடுதல் தகவல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    பள்ளி, கல்லூரி மாண வர்களிடையே பேச்சாற்ற லையும், படைப்பாற்ற லையும் வளர்க்கும் நோக்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 - 2023-ம் ஆண்டுக்கான, மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இப்போட்டிகளில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.

    இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவி கள், அந்தந்த கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை பெற்று நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வழங்குதல் வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ள லாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

    • இந்த வாரம் நடந்த ஏலத்தில் 349.66 குவிண்டால் எடை கொண்ட 1116-மூட்டை நிலக்கடலைகாய் விற்பனைக்கு வந்தது.
    • குறைந்தபட்ச விலையாக ரூ.64.39-க்கும், சராசரி விலையாக ரூ.78.30-க்கும் என ரூ.24 லட்சத்து 98 ஆயிரத்து 325க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வரு கிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு , கருப்பு எள், சிவப்பு எள், வெள்ளைஎள்,நிலக் கடலை காய் ஆகிய வற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 349.66 குவிண்டால் எடை கொண்ட 1116-மூட்டை நிலக்கடலைகாய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.39-க்கும், சராசரி விலையாக ரூ.78.30-க்கும் என ரூ.24 லட்சத்து 98 ஆயிரத்து 325க்கு விற்பனையானது.

    • சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிரா மணியில் இருந்து சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்துபோன முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எங்கிருந்து இந்த பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆசிரி யர்கள், பணியாளர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவல் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், வேலூர் அனைத்து மகளிர் போலீஸ், ஜேடர்பாளையம், பரமத்தி, நல்லூர் மற்றும் வேலக வுண்டம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் பள்ளிகளில் காவல்துறை சார்பில் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் அறிவுரையின் பேரில் பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமை வகித்தார்.

    போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டு, மாணவிகளி டையே தாங்கள் படிக்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரி யர்கள், பணியாளர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் அந்தந்த பகுதிகளில் அடை யாளம் தெரியாத நபர்கள் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் மாணவிகளுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த விதமான தயக்கமும் இன்றி போலீசருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    இதுபோல அந்தந்த போலீஸ் நிலைய கட்டுப் பாட்டில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை யாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் திருச்செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு புறநகர காவல் ஆய்வாளர் பாரதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், மாணவிகள் பள்ளி செல்லும் போது வீட்டின் அருகிலோ, பேருந்து நிறுத்தத்திலோ, பேருந்திலோ யாராவது பாலியல் சீண்டல் செய்தால் அவர் மீது புகார் செய்து தண்டனை பெற்றுத் தர முடியும். மேலும் காவல்துறைக்கு உள்ள பிரத்யேக தொலைபேசி எண்ணில் அழைத்து பேசி னாலும் 1091 என்ற எண்ணில் அழைத்து பேசி னாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளையும் காவல்துறை எடுத்து வரு கிறது. எனவே மாணவிகள், பெண் குழந்தைகள் பயப்ப டாமல் சமூக விரோதிகள் குறித்தும் பாலியல் சீண்டல் செய்யும் நபர்கள் குறித்தும் புகார் செய்ய வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மலர்விழி, ரஞ்சித் குமார், உளவுத்துறை காவலர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆள் ஒல்லியாக இருந்தால் நரம்பு நன்றாக தெரியும். 2 நொடியில் முடித்து விடலாம்.
    • ஊசி போட்ட பிறகு வழக்கமான மரணம் போல் தெரியும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 33). இவர் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சுற்றித்திரிவது வழக்கம்.

    மேலும் இவர் பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் சேர்ந்து அவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி சமூக வலைதளங்களில் இவர் கருணைக்கொலை செய்வதாக கூறிய தகவல் பரவியது.

    வயது முதிர்ந்த, உடல் நலம் பாதிக்கப்பட்ட, நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பவர்களையும் தொடர்ந்து பராமரித்து கவனிக்க முடியாதவர்களையும் சம்பந்தபட்ட குடும்பத்தினர் அழைப்பின் பேரில் விஷ ஊசி போட்டு கொன்று வருவதாகவும், இதற்காக ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் பெற்றதாகவும் தகவல் பரவியது.

    இதுபற்றி வெளியான வீடியோவில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளேன். கடந்த 10 ஆண்டாக இந்த வேலையை செய்து வருகிறேன் என மோகன் ராஜ் கூறி இருந்தார்.

    மேலும் அந்த உரையாடலில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஊசி போடுவதற்கு முன்னால் சாப்பிட்டால் 2 டோஸ் ஆகிவிடும். அதனால் செலவு அதிகரிக்கும். எனவே கொலை செய்வதற்கு முன் சாப்பிட எதுவும் கொடுத்துவிடக்கூடாது. கையையும், காலையும் பிடித்து வாய், மூக்கில் ஊற்றும் வகையிலும் மருந்து உள்ளது.

    ஆள் ஒல்லியாக இருந்தால் நரம்பு நன்றாக தெரியும். 2 நொடியில் முடித்து விடலாம்.

    ஊசி போட்ட பிறகு வழக்கமான மரணம் போல் தெரியும். சென்னை, பெங்களூரு வரை கருணைக்கொலை கேஸ்களுக்கு போய் வந்துள்ளேன். கணக்கே இல்லாமல் கருணைக் கொலைகளை செய்துக் கொண்டிருக்கிறேன்.

    இன்று கூட 2 கருணைக்கொலை கேஸ்கள் கைவசம் உள்ளது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் 2 நொடியில் கருணைக்கொலை செய்வேன்.

    இவ்வாறு அந்த உரையாடலில் உள்ளது.

    இந்த வீடியோ வைரல் ஆனதால் பள்ளிபாளையம் போலிசார் மோகன்ராஜை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் உளறியதாக அவர் கூறி உள்ளார். இதற்கிடையே சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வீடியோ ஆதாரத்தில் அடிப்படையில் அவர் மீது உயிருக்கு ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரை கைது செய்து சிறையில் அடக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இது போன்ற கொலை செய்ததை உறவினர்கள் யாரும் புகார் அளிக்க முன் வரமாட்டார்கள். இது ரகசியமாக நடந்து வரும் செயல், என்பதால் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. இதுபோல செய்ய மோகன்ராஜிக்கு பள்ளிபாளையம் பகுதியில் உள்ள போலி டாக்டர்கள் சிலரும் உதவியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் போலி கிளினிக் நடத்தி வந்த அய்யாவு (75) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மோகன்ராஜிக்கு ஊசி மற்றும் விஷ மருந்து எப்படி கிடைத்தது? என்பது குறித்தும் மோகன்ராஜிடம் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அரசு ஆஸ்பத்திரியை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    • காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே ஓலப்பாளையம் ஊராட்சி காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு ஊராட்சி மூலம் காவிரி குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணற்றுநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. ஆழ்துளை கிணறு தண்ணீரும் சரியாக வருவதில்லை. அதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×