என் மலர்
நாமக்கல்
- அரசு மருத்து வமனையில் தொடர்ந்து மர்ம நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
- இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுக்குள் யார் வருகி றார்கள்?, யார் போகி றார்கள்? என்பது தெரியாமல் உள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வெளி மற்றும் உள் நோயா ளிகளாக தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிதடி தகராறில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி இருந்த பகுதிக்கு, இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை மிரட்டி சென்றனர்.
அடிக்கடி அந்த மர்மந பர்கள் வந்து சென்றதால், மூதாட்டி மருத்துவ அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து வலியுறுத்தி யதின் காரணமாக பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அரசு மருத்து வமனையில் தொடர்ந்து மர்ம நபர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மருத்துவமனை வார்டுக்குள் யார் வருகி றார்கள்?, யார் போகி றார்கள்? என்பது தெரியாமல் உள்ளது.
இதேபோல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பரமத்தி வேலூர் அருகே ராயர்பாளை யத்தை சேர்ந்த பெண் பிரச வத்திற்காக சேர்க்கப்பட்டி ருந்தார். அவருக்கு துணையாக இருந்த, அந்த பெண்ணின் தாய் கைப்பை யில் 2 செல்போன்கள், பணம், கொலுசு உள்ளிட்டவை வைத்திருந்தார்.
இந்நிலையில் இரவில் பிரசவ வார்டிற்கு வந்த மர்ம நபர்கள், செல்போன், கொலுசு, பணம் வைத்தி ருந்த கைப்பையை திருடி சென்று விட்டனர். இது குறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் தெரிவித்தார்.
அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கண்கா ணிப்பு கேமராவை பரிசோ தனை செய்தாகவும் தெரி வித்துள்ளார். மேலும் போலீசில் புகார் செய்யு மாறு அறிவுறுத்தியுள்ளார். அவர்களும் திருச்செங்கோடு போலீசில் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மருத்துவ மனை நிர்வாகமும் இதை கண்டுகொள்ளவில்லை.
இதே நிலைமை நீடித்தால் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் உடமை களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படும். எனவே திருட்டு, நோயாளிகளை மிரட்டுவதை போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நோயா ளிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார், சின்ன முதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.
நாமக்கல்:
நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார், சின்ன முதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வாகனத்தை சுற்றிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டு இருந்தனர்.
அவர்கள், அந்த வாக னத்தை சோதனை செய்ய சென்றபோது, டிரைவர் வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். அப்போது அங்கு சென்ற போலீசார், வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
இதில் அந்த வாகனத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து புகையிலை பொருட்களை சரக்கு வாக னத்துடன் போலீசார் பறி முதல் செய்தனர். இதை யடுத்து சரக்கு வாகன டிரைவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டப் பட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது 40) என்பவரை போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.
- நேற்று இரவு பள்ளிபாளையம் சாலை, பெருமாபாளையம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.
- நாய்கள் சண்டை போட்டு கொண்டு இவரது டூவீலரில் வந்து மோத, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் பாலமுருகன்(35.) டூவீலர் மெக்கானிக். நேற்று இரவு பள்ளிபாளையம் சாலை, பெருமாபாளையம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய்கள் சண்டை போட்டு கொண்டு இவரது டூவீலரில் வந்து மோத, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் பெருந்துறை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அனைத்து பகுதியிலும் தெரு நாய்கள் அதிகம் ஆனதால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து அங்கேயே வசிக்கின்றனர்.
- அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.
நாமக்கல்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 45), இவரது மனைவி வானீஸ்வரி. இவர்கள், எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து அங்கேயே வசிக்கின்றனர்.
இளையராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.
மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசலில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு அமைதி ஊர்வலம் மற்றும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
முன்னதாக ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலை வழியாக பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளி வாசலை வந்தடைந்தது.
தொடர்ந்து பள்ளி வாசல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் ஒருவரை ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி தலைவர் சவான் சாகிப், நிர்வாக கமிட்டி செயலாளர் இக்பால், ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்த னர். இதேபோல் பரமத்தி, பாலப்பட்டியிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடை பெற்றது.
- புது மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 கலச பூஜை நடைபெற்றது.
- இதில் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் மற்றும் புது மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப் பட்டது. சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாலை 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ரமேஷ் (வயது 44). இவர் நாமக்கல், சேலம் ரோட்டில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார்.
- சாலையோரம் குவியலாக இருந்த மண்ணில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே சரிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). இவர் நாமக்கல், சேலம் ரோட்டில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார்.
ரமேஷ் கடைக்கு பொரு ட்கள் வாங்குவதற்காக, தனது இருசக்கர வாக னத்தில் நாமக்கல் கடை வீதிக்கு சென்றார். பொரு ட்களை வாங்கிக்கொண்டு மளிகைக்கடைக்கு திரும்பிய அவர், சாலையோரம் குவியலாக இருந்த மண்ணில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே சரிந்தார்.
இதில் படுகாயம் அடைந்த ரமேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சேலம் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல்லில் 2 குழந்தைகளின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.
- நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாமக்கல்:
நாமக்கல்லில் 2 குழந்தை களின் தாய், கல்லூரி மாணவி மாயமானார்கள்.
கல்லூரி மாணவி
நாமக்கல் தாதம்பட்டி மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகள் மேனகா (வயது 18). இவர் ராமலிங்கம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு மைக்ரோ பயாலஜி படித்து வருகிறார்.
கடந்த 15-ந் தேதி கல்லூ ரிக்கு சென்ற மேனகா, அதன் பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சந்திரகுமார் நாமக்கல் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.
2 குழந்தைகளின் தாய்
இதேபோல், நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி சிவப்பிரகாசம் நாமக்கல்லுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் குழந்தைகள் மட்டும் இருந்த னர். ஆனால் மனைவி ஜெயந்தி வீட்டில் இல்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் மற்றும் உற வினர் வீடுகளில் தேடினார். ஆனால் ஜெயந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கபிலர்மலை துணை மின் நிலையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
- விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு பகல் மற்றும் இரவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்ப டுகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின் நிலையத்தில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது. மேலும் யு.பி.எஸ். போடாத வீட்டில் உள்ள பொதுமக்கள் கொசுக்கடியால் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு பகல் மற்றும் இரவில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்ப டுகின்றனர். கபிலர் மலை யில் இருந்துவரும் மின்சார கம்பிகள் தென்னந்தோப்பு கள் வழியாக வருவதால் அடிக்கடி தென்னை மட்டைகள் விழுந்து மின்தடை ஏற்படாதாவும் உடனடியாக தீர்வு காண மின்சார வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே மின் நிறுத்தம் சரி செய்ய முடியாமல் நீண்ட நேரம் ஆவதாகவும் மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே கபிலர் மலையிலிருந்து கிராம பகுதிகளுக்கு மின்கம்பிகள் மூலம் மின்விநியோகம் செய்வதை மாற்று ஏற்பாடு செய்து மின்சாரம் தடை யில்லாமல் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், விவசாயிகள், வணி கர்கள் தெரிவித்துள்ளனர்.
- பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர்.
- ஒரு மாணவியிடம் அந்த ஆசிரியர் தவறாக நடக்க முயற்சித்த தாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஓ.சவுதாபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது.
ஆசிரியர் ஒருவர் செல்போன் மூலம் சமூக அறிவியல் பாடத்தில் வரை படங்களை மாணவர்களுக்கு கற்றுத் தந்துள்ளார். அப்போது ஒரு மாணவியிடம் அந்த ஆசிரியர் தவறாக நடக்க முயற்சித்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவி வகுப்பறையில் அழுததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவி யரிடம் விசாரித்தார். இந்த சம்பவம் குறித்து மாணவி அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நேற்று அந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி, மாணவியின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதைய டுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரி பாலசுப்பிர மணியம் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி னார். இதுகுறித்து பள்ளி யின் தலைமை ஆசிரியர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு இறுதி தேர்வுக்கான சிறப்பு வகுப்பில் பாடம் நடத்திய போது, ஆசிரியர் தவறி மாணவி மீது விழுந்ததாக கூறப்படுகிறது. அதை சக மாணவிகள் பார்த்து கேலி செய்ததால் மாணவி அழுதுள்ளார். இது பற்றி மாணவி பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் எதேச்சையாக நடந்தது என்றும், தவறான எண்ணத்தில் நடக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசோளி பாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
- குடிநீர் பைப் உடைந்ததால் கடந்த சில நாட்களாக பெரியசோளிபாளயம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியசோளி பாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது குடிநீர் பைப் உடைந்ததால் கடந்த சில நாட்களாக பெரியசோளிபாளயம் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது.
பின்னர் குடிநீர் பைப் லைன் சரிசெய்யப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் சேறும் சகதியும் கலந்து குடிநீர் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சுத்தமான குடிநீரை பெரியசோளிபாளயம் ஊராட்சி நிர்வாகம் வழங்கக்கோரி கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சேறும் சகதியும் கலந்த தண்ணீர் குடத்துடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் மற்றும் பெரியசோளிபாளயம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுகாதாரமான குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 3-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
- முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 3-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர் துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
முகாமில் பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.






