என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நீச்சல் பயிற்சிகள் மற்றும் குளிப்பதற்காக, போதிய பயிற்சியின்றி, நீர் நிலைகளில் மாணவர்கள் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.
    • இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்கும் மாணவர்கள் நீர் தேக்கங்கள், ஏரி, குளங்கள், ஆறுகள், கல் குவாரிகள், மற்றும் கிணறுகள் ஆகிய வற்றில் நீச்சல் பயிற்சிகள் மற்றும் குளிப்பதற்காக, போதிய பயிற்சியின்றி, நீர் நிலைகளில் மாணவர்கள் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு போதிய நீச்சல் பயிற்சியின்றி நீர்நிலைகளில் இறங்குவதை அனைவரும் தவிர்ப்பதுடன், ஆபத்தான நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்தான பகுதிகளில் மாணவர்கள் நீச்சல் அடிப்பதும் மற்றும் குளிப்பதை தடுக்க அனை வருக்கும் தெரியும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டில் இல்லாத கல் குவாரிகளில் நீர் தேங்கியி ருப்பின் அப்பகு தியை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தடுக்க வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    அனைத்து பெற்றோர்க ளும் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளை ஆபத்தான பகுதிகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளு தலுக்கும் மற்றும் குளிப்ப தற்கும் அனுமதிக்க கூடாது, வீடுகளில் அமைக்கப் பட்டுள்ள தண்ணீர் தொட்டி களில் குழந்தைகள் தவறி விழாதவாறு அவற்றை மூடியிட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்ப துடன், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது.
    • சூறைக் காற்று காரண மாக, டிரான்ஸ்பர்மரின் ஒரு பகுதி வெடித்து சிதறியது.

    நாமக்கல்:

    தமிழகத்தில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்ப துடன், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, சிறுவர்கள் முதல், முதிய வர்கள் வரை, அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திப்பு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழைக்கு வாய்ப்பு உள்ளது என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக, நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை அதிக பட்சமாக, 104 டிகிரி வெப்பம் எட்டியுள்ளது. இது, 109 டிகிரி வரை அதிகரிக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள னர். இந்நிலையில், மாவட்டத்தின் ஒரு சில பகு திகளில், லேசான மற்றும் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. மோகனூர் பகுதியில், பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    சூறைக் காற்று காரண மாக, டிரான்ஸ்பர்மரின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. அதேபோல், ஆரியூர், மாரப்பனூர் மற்றும் மணியங்காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 6 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. அதன் காரண மாக, எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, மோகனூர், பேட்டப்பா ளையம், கொளத்தூர், ஆரியூர், வளை யப்பட்டி, கிடாரம் உள்ளிட்ட பகுதி களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு சரி செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கினர். இரவு நேரத்தில், 10 முதல், 14 மணிநேரம் வரை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டதால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

    மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்ட ரில்): எருமப்பட்டி, 1, மங்களபுரம் 10.80, மோக னூர் 56, திருச்செங்கோடு 1, கலெக்டர் ஆபீஸ் 1, கொல்லி மலை 4, என மொத்தம் 73.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கோடை வெப்பத்தை தனிப்பதற்காக பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பிரபாகரன் (வயது 22). இவர் மீது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது.
    • நாமக்கலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கலர் காடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபாகரன் (வயது 22). இவர் மீது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி விசாரித்த னர். விசாரணையில் அவர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் தொடர்புடைய பிரபாகரன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் திருடிய கார் மற்றும் மோட்டார் சைக்கிள் எங்கு உள்ளது என்பது குறித்து கேட்டறிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது.
    • லாரிக்கு வழிவிட வேண்டி டிரைவர் பஸ்சை வேகமாக சாலை ஓரம் திருப்பினார். இதில் பஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

    குமாரபாளையம்:

    சென்னையில் இருந்து கோவைக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. ஈரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு பஸ் குமாரபாளையம் வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் என்ற இடத்தில் பஸ் வந்தபோது, எதிரே வெப்படையை நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டி ருந்தது.

    இந்த லாரிக்கு வழிவிட வேண்டி டிரைவர் பஸ்சை வேகமாக சாலை ஓரம் திருப்பினார். இதில் பஸ் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

    இதில், பஸ்சில் பயணம் செய்த பியூலா, பிரான்சிஸ், முத்து, அலெக்ஸ்சாண்டர், பிரபாகரன், மதுபாலா ஆகிய 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.

    • கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பச்சுடையாம்பாளையம் ஊராட்சி குருவாலா அருகே உள்ள மூலக்காடு குமாரபாளையத்தார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார்(வயது 53). விவசாயி. இவரது மனைவி கீதா (39). இவர்களுக்கு பிரதீவ் (19) என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சிவகுமார் தனது ஊரின் அருகாமையில் உள்ள தோட்டத்தில் தாக்காளி சாகுபடி செய்துள்ளார். கோடை காலம் என்பதால் மழை மற்றும் காற்றில் செடிகள் சாயாமல் இருப்பதற்காக கணவன், மனைவி இருவரும் டிராக்டர் மூலம் குச்சிகளை தோட்டத்திற்கு கொண்டு போய் போட்டுள்ளனர்.

    பின்னர் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு டிராக்டர் மூலம் சென்றுள்ளனர். அப்போது கீதா டிராக்டரை ஓட்டிச் சென்றார். சேறும், சகதியுமாக இருந்த மண்பாதையில் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று வயலுக்குள் சென்று கவிழ்ந்தது.

    இதில் சிவக்குமாரும், அவரது மனைவி கீதாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர். இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சிவகுமார்-கீதா ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இது பற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது.
    • முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 முறை முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அதன் பின்னர் முட்டை விலை பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 22-ம் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    இந்நிலையில் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-465, பர்வாலா-395, பெங்களூரு-450, டெல்லி-390, ஹைதராபாத்-400, மும்பை-450, மைசூர்-455, விஜயவாடா-385, ஹொஸ்பேட்-410, கொல்கத்தா-470.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.109 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 77 என நெஸ்பேக் நிர்ணயித்துள்ளது.

      நாமக்கல்:

      ராசிபுரம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மகன் ரகுநாத் (வயது 25) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோகனூர் காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு தனது நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது காவிரி ஆற்றங்கரையோரம் சென்றபோது, அங்கு வந்த 2 பேர் வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ரூ.500-ஐ பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

      அப்போது ரகுநாத் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள், வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரையும் பிடித்து மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் எஸ்.ஐ துர்க்கைசாமி விசாரணை செய்ததில், காட்டு பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விக்ரம் (21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • புகை யிலை பாக்கெட்டு களை விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
      • சேகர் (67) என்பவரது மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த 46 குட்கா பாக்கெட்டுகளையும் பரமத்தி போலீசார் பறி முதல் செய்தனர்.

      பரமத்தி வேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் டீ கடை மற்றும் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகை யிலை பாக்கெட்டு களை விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவ லின் அடிப்படையில் பர மத்தியில் உள்ள பாலுசாமி (வயது 57) என்பவரது டீ கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 26 பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் பான்பராக் பாக்கெட்டுகளையும், அதே பகுதியை சேர்ந்த சந்திர சேகர் (67) என்பவரது மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த 46 குட்கா பாக்கெட்டுகளையும் பரமத்தி போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்த பாலுச்சாமி மற்றும் சந்திர சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • வடுகம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
      • வழக்கம்போல் டாஸ்மாக் கடையை திறந்த, சரவணன் உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேல் கூரை உடைக்கப்பட்டிருந்தது.

      நாமக்கல்:

      ராசிபுரம் தாலுக்கா நாமகிரிப்பேட்டை அருகில் உள்ள வடுகம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் விற்பனையாளராக சரவணன் உள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அடுத்த நாள் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை திறந்த, சரவணன் உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேல் கூரை உடைக்கப்பட்டிருந்தது. கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 96 மதுபான பாட்டில்களை (2பெட்டி) திருடிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.15ஆயிரம் ஆகும்.

      இது குறித்து அவர் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • தினசரி தள்ளு வண்டிகளில் 18 வார்டுகளுக்கு சென்று குப்பையை சேகரிப்பதற்கு என 110 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
      • பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தூய்மை பணியாளர்களை தீவிரமாக கண்காணித்து வந்தார்.

      பரமத்திவேலூர்,

      ஏப். 23-

      நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்கு தினசரி தள்ளு வண்டிகளில் 18 வார்டுகளுக்கு சென்று குப்பையை சேகரிப்பதற்கு என 110 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தூய்மை பணியாளர்கள் சிலர் பணிக்கு வந்து விட்டு பின்னர் தங்களது சொந்த வேலைக்கு சென்றுவிடு வதாக பேரூராட்சி செயல் அலுவலருக்கு புகார் வந்தது.

      இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தூய்மை பணியாளர்களை தீவிரமாக கண்காணித்து வந்தார். அப்போது 7 தூய்மை பணியாளர்கள் வேலைக்கு வந்துவிட்டு, மாற்று வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

      இதைதொடர்ந்து செயல் அலுவலர் பணிக்கு வந்து விட்டு வேலை செய்யாமல் சொந்த பணிக்கு சென்ற 7 பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

      பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார் கூறியதாவது:-

      பேரூராட்சி பணிக்கு வந்து வேலை செய்யாமல் தனது சொந்த வேலைக்கு செல்வதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை கண்காணிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

      அதில் பணியை சரிவர செய்யாத தூய்மை பணியாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பேரில் பணிக்கு வந்து வேலை செய்யாமல் சொந்த வேலைக்கு சென்ற 7 தூய்மை பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

      ஒரு வார காலத்துக்குள் சரியான விளக்கம் தராவிட்டால் மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

      • தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழிலாளி.
      • திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தங்கதுரை (வயது 22). தேங்காய் பறிக்கும் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரையைச் சேர்ந்த திவாகர் என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பொ ழுது நிலை தடுமாறி தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

      அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியி லேயே தங்கதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை சவக்கிடங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
      • போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

      நாமக்கல்,ஏப்.23-

      பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில், எஸ்.ஐ.க்கள் மலர்விழி, சண்முகம் மற்றும் ஏட்டுகள் பிரவீன், சரவணன் ஆகி யோர் சின்னார்பாளையம் அருகே, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவீட்டுக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

      பின்னர் போலீசார் வீட்டில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது சம்மந்தமாக, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

      விசாரணையில் வடமா நிலத்தை சேர்ந்த வாலி பர்கள் வெப்படை பகுதி யில், வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டு உரிமையாளர் முருகேஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமு தல் செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அதனை பதுக்கி வைத்த வட மாநில வாலி பர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

      ×