என் மலர்
நீங்கள் தேடியது "Gutka first"
- புகை யிலை பாக்கெட்டு களை விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சேகர் (67) என்பவரது மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த 46 குட்கா பாக்கெட்டுகளையும் பரமத்தி போலீசார் பறி முதல் செய்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியில் டீ கடை மற்றும் மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகை யிலை பாக்கெட்டு களை விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவ லின் அடிப்படையில் பர மத்தியில் உள்ள பாலுசாமி (வயது 57) என்பவரது டீ கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 26 பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் பான்பராக் பாக்கெட்டுகளையும், அதே பகுதியை சேர்ந்த சந்திர சேகர் (67) என்பவரது மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த 46 குட்கா பாக்கெட்டுகளையும் பரமத்தி போலீசார் பறி முதல் செய்தனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்த பாலுச்சாமி மற்றும் சந்திர சேகர் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.