search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "swimming practice"

    • தற்போது வேளச்சேரி, ஷெனாய் நகர், நேரு உள்விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க உள்ளது.
    • 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் இந்த வகுப்புக்கு ரூ.2000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னையில் கோடை காலத்தையொட்டி சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கிறது. இதுவரை வேளச்சேரியில் மட்டும் இந்த பயிற்சி நடந்து வருகிறது. இதனால் தனியார் பயிற்சி மையங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலித்தது.

    இதையடுத்து தற்போது வேளச்சேரி, ஷெனாய் நகர், நேரு உள்விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்க உள்ளது.

    12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் இந்த வகுப்புக்கு ரூ.2000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள் விளையாட்டரங்கில் மட்டும் ரூ.2,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 25 முதல் இந்த பயிற்சி முகாம் 3 கட்டங்களாக நடக்கிறது. கடந்த 25-ந்தேதி முதல் மே மாதம் 7-ந்தேதி, மே 9-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை, மே 21-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை. மேலும் தினமும் 3 ஷிப்டுகள் பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • நீச்சல் பயிற்சிகள் மற்றும் குளிப்பதற்காக, போதிய பயிற்சியின்றி, நீர் நிலைகளில் மாணவர்கள் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.
    • இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்கும் மாணவர்கள் நீர் தேக்கங்கள், ஏரி, குளங்கள், ஆறுகள், கல் குவாரிகள், மற்றும் கிணறுகள் ஆகிய வற்றில் நீச்சல் பயிற்சிகள் மற்றும் குளிப்பதற்காக, போதிய பயிற்சியின்றி, நீர் நிலைகளில் மாணவர்கள் நீச்சலில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு போதிய நீச்சல் பயிற்சியின்றி நீர்நிலைகளில் இறங்குவதை அனைவரும் தவிர்ப்பதுடன், ஆபத்தான நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்தான பகுதிகளில் மாணவர்கள் நீச்சல் அடிப்பதும் மற்றும் குளிப்பதை தடுக்க அனை வருக்கும் தெரியும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது. மேலும், பயன்பாட்டில் இல்லாத கல் குவாரிகளில் நீர் தேங்கியி ருப்பின் அப்பகு தியை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தடுக்க வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    அனைத்து பெற்றோர்க ளும் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளை ஆபத்தான பகுதிகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளு தலுக்கும் மற்றும் குளிப்ப தற்கும் அனுமதிக்க கூடாது, வீடுகளில் அமைக்கப் பட்டுள்ள தண்ணீர் தொட்டி களில் குழந்தைகள் தவறி விழாதவாறு அவற்றை மூடியிட்டு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×