என் மலர்
நீங்கள் தேடியது "கூரையை உடைத்து கொள்ளை"
- வடுகம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
- வழக்கம்போல் டாஸ்மாக் கடையை திறந்த, சரவணன் உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேல் கூரை உடைக்கப்பட்டிருந்தது.
நாமக்கல்:
ராசிபுரம் தாலுக்கா நாமகிரிப்பேட்டை அருகில் உள்ள வடுகம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் விற்பனையாளராக சரவணன் உள்ளார். சம்பவத்தன்று இரவு அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அடுத்த நாள் வழக்கம்போல் டாஸ்மாக் கடையை திறந்த, சரவணன் உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேல் கூரை உடைக்கப்பட்டிருந்தது. கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 96 மதுபான பாட்டில்களை (2பெட்டி) திருடிச் சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.15ஆயிரம் ஆகும்.
இது குறித்து அவர் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






