என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
    • இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்த கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிகிறார்.

    இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

    தற்போது கோடை மழை பெய்து இருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை மழையுடன் சேர்த்து சூறாவளி காற்றும் அடித்ததால் பல இடங்களில் அறுவடை பருவத்தில் இருந்த வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்த கோடை மழை சுட்டெரித்த கோடை வெப்பத்தை தணித்தாலும் பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களிலும் விவசாய பயிர்கள் அழிந்துள்ளன. எனவே இதற்கு இழப்பீடு கேட்டு ஏற்கனவே விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராஜராஜேஸ்வரி அம்மன் மடாலயத்தில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவை முன்னிட்டு 3 நாட்கள் சங்கரர் வரலாறு படிக்கப்பட்டு, சங்கர ஜெயந்தியான நேற்று நிறைவடைந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் மடாலயத்தில் சங்கர ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டது.

    விழாவை முன்னிட்டு 3 நாட்கள் சங்கரர் வரலாறு படிக்கப்பட்டு, சங்கர ஜெயந்தியான நேற்று நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து சங்கரர் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு வகையான கனி வைத்து சிறப்பு பஜனைகள் பாடப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கரரை வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கந்தசாமி (வயது 45). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வெளியூர் சென்று விட்டார்.
    • வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஹரி நகர் அங்காளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வெளியூர் சென்று விட்டார். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது பற்றி அவர் வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், நாமக்கல் மாவட்டம் செருக்கலை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அவர் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வெண்ணந்தூர் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் தண்டேஸ்வரநல்லூர் கொய்யாப்பிள்ளை சாவடி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் பிரபு (24), நாமக்கல் மாவட்டம் பரமத்தி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் மணி என்கிற கோவில் மணி (35) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், அவர்கள் இருவரும் கந்தசாமி வீட்டில் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 54.12 1/2 குவிண்டால் எடை கொண்ட 15,820 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.55-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.00-க்கும், சராசரி விலையாக ரூ.25.29-க்கும் என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 26ஆயிரத்து 724-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 200.37 குவிண்டால் எடை கொண்ட 466-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.69-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.81.69-க்கும், சராசரி விலையாக ரூ.82.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.79.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.99-க்கும், சராசரி விலையாக ரூ.77.89-க்கும் என மொத்தம் ரூ.15லட்சத்து 44ஆயிரத்து 780-க்கு விற்பனை யானது.

    எள்

    அதேபோல் 383.43 குவிண்டால் எடை கொண்ட 513-மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.156. 99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.130.99-க்கு ம், சராசரி விலையாக ரூ.148.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.157.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.140.10-க்கும், சராசரி விலையாக ரூ.153. 89-க்கும், வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.164.10-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.155.10-க்கும், சராசரி விலையாக ரூ.163.10-க்கும் என மொத்தம் ரூ.56லட்சத்து 91ஆயிரத்து 118-க்கு விற்ப னையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 73 லட்சத்து 62 ஆயிரத்து 642-க்கு விற்பனையானது.

    • கொசவம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.
    • கோவிலின் பூட்டு மற்றும் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே கொசவம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவிலின் பூட்டு மற்றும் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைக்கப்பட்டது. இதனைப் பார்த்த கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் பூட்டு மற்றும் சி.சி.டி.வி காமிராவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 22), சூர்யா (21), அஜித் (23) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்ட றிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்ட றிந்தார்.இதில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கை கள் குறித்து மொத்தம் 491 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர்.

    அவற்றை பரிசீலித்த கலெக்டர், மனுக்களை உரிய அலுவலர்களிடம் வழங்கி, விரைவாக நடவ டிக்கை எடுக்க அவர்களுக்கு உத்தர விட்டார். அதனைத்தொ டர்ந்து, மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த 2 ரேஷன் கடை விற்பனையாளர்கள், 2 எடையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத் தளத்தில் மாற்றுத்திறனாளி களை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து, 1 மாற்றுத்தி றனாளிக்கு ரூ.2,780 மதிப்பி லான காதொலி கருவி, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,750 மதிப்பில் சிபி மடக்கு சக்கர நாற்காலி, 1 மாற்றுத்திறனா ளிக்கு ரூ.6,450 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 3 மாற்றுத்திற னாளிகளுக்கு ரூ.16,980 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் செல்வக்கு மரன், சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.
    • எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் வசித்து வருபவர் ராமசாமி மகன் தங்கவேல் (வயது 43). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.28,25,000-ஐ தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடனாக பெற்று லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்துள்ளார்.

    ஒவ்வொரு மாதமும் கடனுக்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், எவ்வித காரணமும் இல்லா மல் கடந்த 2019 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லாரியை தனியார் நிதி நிறுவத்தினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுவிட்டனர்.

    இந்த பிரச்சினை குறித்து தங்கவேல் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார். அதில், தனியார் நிதி நிறுவனத்தினர், எவ்வித முன் அறிவிப்பும் செய்யா மல், லாரியை பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற னர். மேலும் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட லாரியை, ரூ.7 லட்சத்து 60 ஆயிரத் துக்கு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளனர். தன்னிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து கொண்ட தால் ஏற்பட்ட இழப்புக்கு ரூ.23 லட்சம் நிவாரணமும், நிதி நிறுவனத்தின் செயல்க ளால் ஏற்பட்ட சிரமங்க ளுக்கு ரூ.5 லட்சம் நிவார ணமும் வழங்க வேண்டும் என்று வழக்கில் தங்கவேல் கேட்டிருந்தார்.நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு, வழக்கு தாக்கல் செய்தவரின் சாட்சியம் மற்றும் ஆவணங்களை பரிசீலனை செய்து வாதங்களை கேட்ட நிலை யில் கடந்த வாரம் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலை யில், நீதிபதி ராமராஜ் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், சட்டவிரோதமாக வாக னத்தை நிதி நிறுவனம் பறிமுதல் செய்துள்ளதும், ரூ.30 லட்சம் மதிப்புடைய அந்த லாரியை ரூ.7,60,000-க்கு, விற்பனை செய்துள்ளதும் வழக்கில் நிரூபிக்கப்பட்டது.

    மேலும் தவறான முறை யில் வாகனம் விற்கப்பட்ட பின்னர் பெயர் மாற்றம் செய்யப்படாமலும் இன்சூ ரன்ஸ் புதுப்பிக்கப்படா மலும் வாகனம் பயன்ப டுத்தப்பட்டு வந்துள்ளது என்பதும் வழக்கில் உறுதிப்ப டுத்தப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு தனியார் நிதி நிறுவ னம் ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்தை, 12 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று நுகர் வோர் கோர்ட்டு சம்மந்தப் பட்ட நிதி நிறுவ னத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

    • பிரதீப் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • சாலையில் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரதீப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், சக்தி நகரை சேர்ந்தவர் அன்பழ கன். இவரது மகன் பிரதீப் (வயது 37). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவரும், இவரது நண்பர் சசிகுமார் (37) ஆகிய இருவரும் கடந்த 22-ந் தேதி பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் கீரம்பூர் 4 ரோடு பகுதியில் சென்ற போது, சாலையில் குறுக்கே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரதீப் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரதீப், மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் அவரை காப்பாற்றி சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரதீப் உயிரி ழந்தார். இதனிடையே காய மடைந்த சசிகுமார் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாவுரெட்டி யில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி விழா நடைபெற்றது.
    • ஏராள மான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே மாவுரெட்டி யில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி விழா நடைபெற்றது. இதில் ஏராள மான ஆண்கள் மற்றும் பெண்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    தீமிதி திருவிழா கடந்த 9-ந் தேதி, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 15-ந் தேதி மறுக்காப்பு கட்டி அம்மனுக்கு நாள்தோ றும் சிறப்பு அபிஷேக ஆரா தனைகளும், அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.

    நேற்று காலை பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். மாலை அம்மன் கோவில் முன்பு இருந்த தீ குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    இன்று மாலை பொங்கல், மாவிளக்கு மற்றும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவ டைகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை மாவுரெட்டி மகா மாரியம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

    • மோட்டார் சைக்கிளில் பெரியமணலி-வேலகவுண்டன் பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
    • எதிரே அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே செம்மங்காட்டுபுதூர் பகுதியில் செங்கல் சூளை யில் வேலை பார்த்து வருப வர் அஜித் குமார் (வயது 27). இவரும் அதே சூலையில் வேலை பார்த்து வரும் ரவி (54) என்பவரும் வேலையை முடித்து விட்டு இரவு சுமார் 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பெரியமணலி-வேலகவுண்டன் பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிளை அஜித்குமார் ஓட்டிச் சென்றார், பின்னால் ரவி அமர்ந்திருந்தார்.

    அப்போது எதிரே அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்தது அதே பகுதியை சேர்ந்த குமாரசாமி என்ப வர். இதில் நேருக்கு நேர் மோதியதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலக வுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மோட்டார் பைக்கை ஒட்டி வந்து விபத்து ஏற்ப டுத்திய குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரி முன்பு, மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து செல்ல முயன்றார்.
    • கோவையிலிருந்து வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமார பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் வட்டமலை, காந்தி நகரில் வசிப்பவர் ரவிக்குமார் (வயது 36.). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்று காலை, எதிர்மேடு, தனியார் கல்லூரி முன்பு, மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவையிலிருந்து வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமார பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோ தித்த டாக்டர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்கள்.

    மற்றொரு விபத்து

    ஈரோடு மாவட்டம், சித்தார் பகுதியில் வசிப்பவர் சதீஸ்குமார் (28.) இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் தன் நண்பனை பார்ப்பதற்காக, குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளை யம், மணி போட்டோ ஸ்டூடியோ அருகே வந்த போது, எதிரில் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் வந்த வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். இவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவதாக மனைவி யிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர், மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 57) லாரி டிரைவர். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு பிரியா என்ற ஒரு மகளும் ஜீவா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் மணி நேற்று முன்தினம் இரவு வீட்டி லிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று வருவதாக மனைவி யிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

    அவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங் கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சாயக்காடு பிரிவு ரோடு அருகே சென்று கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு பின்னால் அதிவேக மாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணி ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிள் உடன் மணி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதுகுறித்து வேலக வுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மணியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கி டங்கில் வைத்து இச்சம்பவம் குறித்து போலீசார் மணியின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடை யாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×