என் மலர்
நாமக்கல்
- பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.
- இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.
நாமக்கல்:
தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.
இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது .
அந்த வகையில் 2023 -ம் ஆண்டுக்கான போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் கலை திருவிழா, விளையாட்டு, வானவில் மன்றம், சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வட்டார அளவில் போட்டிகள் நடைபெற்றன.
அதில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். மாநில முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 152 மாணவ- மாணவி கள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். இவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ரஷ்யா, லண்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி சுற்றுலாவிற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஒவ்வொரு குழுவிலும் மாணவர்களை அழைத்துச் செல்ல 16 ஆசிரிய, ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தேர்வாகியுள்ள 7 மாணவ -மாணவிகளுடன் ஒரு ஆசிரியரும் ஒரு ஆசிரியை யும் வெளிநாடு சுற்றுலா செல்கின்றனர்.
வெளிநாடு செல்லும் மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏழை மாணவ- மாணவிகளுக்கு ரூ. 50000 மதிப்பிலான சுற்றுலா செல்வதற்கான உடைமைகளை தன்னார்வலர்கள் வழங்கி உள்ளனர். தமிழக அரசு உத்தரவின் பேரில் இவர்கள் ஜூன் மாதம் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் மாணிக்கம் தலைமை நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் மாணிக்கம் தலைமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.
வருகிற 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநில மாநாட்டில் நாமக்கல் நகராட்சி பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களுடைய கடைகளுக்கு விடுமுறை அளித்து குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.
மாநாட்டில் மாவட்ட தலைவர் வெள்ளையனுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயலாளர் கருணாகரன், கவுரவ தலைவர் சேரன் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
வருகிற 29-ந் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பநாமக்கல் மாவட்டத்தில்
பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கைட உள்ளது. விடுமுறை நாட்களில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
அனைத்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி முதல்வர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் வந்தால் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கோடை விடுமுறையில் பள்ளிகள் நடைபெற்றால் மாணவர்களின் பெற்றோர் நாமக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தையும் அல்லது மாவட்ட கல்வி அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துரைசாமி. இவர் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (38).
- கார்த்திகா கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம், பொம்மம்பட்டியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனியார் நூற்பாலை யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (38).
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கார்த்திகா கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல்நிலை சரியாகாமல் அவர் அவதிப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூங்கச் சென்ற கார்த்திகா, வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் செல்வி, அறைக்கு சென்று கதவை தட்டிப் பார்த்தபோது உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. பின்னர் கதவை பலமுறை தட்டியும் திறக்காத தால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போநாமக்கல் அருகே
தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலைது கார்த்திகா மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகா தற்கொலை செய்து கொண்டற்கு உடல்நலமின்மை தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
- பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பால முருகன், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அணிச்சம் பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், கு.அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில்,
ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், காவேரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 229.90 குவிண்டால் எடை கொண்ட 717 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.19-க்கும், சராசரி விலையாக ரூ.76.50-க்கும் என ரூ.16 லட்சத்து 7ஆயிரத்து 665-க்கு விற்பனையானது.
- நாளை காலை 10 மணிக்கு, கோடை கால மீன் வளர்ப்பில் பண்ணை மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
- நவீன தொழில்நுட்ப முறையில் மீன்வளர்ப்பு, மேலும் மாநில, மத்திய அரசுகளின் மீன் வளர்ப்புக்கான மானிய உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்ப டும்.
நாமக்கல்:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை காலை 10 மணிக்கு, கோடை கால மீன் வளர்ப்பில் பண்ணை மேலாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில், மீன் பண்ணைகளில் கோடைக் காலத்திற்கேற்ப தண்ணீர் பராமரிப்பு முறைகள், தாய் மீன் மற்றும் மீன் குஞ்சுகளுக்கு உணவு மேலாண்மை, தண்ணீரில் வெப்பநிலையை குறைப்பதற்கான ஆலோசனை, மீன் பிடித்த குளங்களை காயவிட்டு மேல் மண்ணை அகற்றி செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள், குறுகிய கால மீன் வளர்ப்பு முறைகள், இயற்கை உணவு உற்பத்தி முறைகள், நவீன தொழில்நுட்ப முறையில் மீன்வளர்ப்பு, மேலும் மாநில, மத்திய அரசுகளின் மீன் வளர்ப்புக்கான மானிய உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்ப டும்.
இப்பயிற்சி கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் பயிற்சிக்கு வருபவர்கள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
- ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எம்.எம்.டி மற்றும் நர்ச்சர் என்ற தன்னார்வ இயக்கம் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்தும், அப்படிப்பினை படிக்க ஏதுவாக உள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் எம்.எம்.டி மற்றும் நர்ச்சர் என்ற தன்னார்வ இயக்கம் மூலம் வழிகாட்டு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சி, நாளை 27-ந் தேதி மாலை 3 மணிக்கு நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது.
- இக்கோவில் தேர் திருவிழா, கடந்த 9-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூரில் வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா, கடந்த 9-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை தினந்தோறும் மாலை சப்பாரம், சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னபட்சி வாகனம், யானை மற்றும் பூந்தேர் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
23-ந் தேதி மாலை வடிசோறு மற்றும் வெட்டும் குதிரையில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 24-ந் தேதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று காலை அலகு குத்துதல் மற்றும் அக்னி சட்டி எடுத்தலும், மாலை பொங்கல், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் ஆற்றில் விடுதலும், 28-ந் தேதி காலை மஞ்சள் நீராடலும், மாலை முத்துபல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
- சட்ட விரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
- கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
நாமக்கல்:
தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் தாலுகா, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அப்பகுதியில் சட்ட விரோதமாக நடைபெற்ற மணல் கடத்தலை தடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிசை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் நாமக்கல் மாவட்ட வி.ஏ.ஓ.க்கள் சங்கம் சார்பில், நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகி லட்சுமிநரசிம்மன் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தூத்துக்குடியில் வி.ஏ.ஓ.வை தாக்கியவர்களை உடனடியாக கொலை குற்ற வழக்கில் கைது செய்து குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். தமிழக அரசு பணி பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி னார்கள்.
- நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதால், ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்குகிறது.
- சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளது.
நாமக்கல்:
தமிழகத்தில் நாகப்பட்டி னம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளது. மேலும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதால், ஆன்மிக சுற்றுலா தளமாக விளங்குகிறது.
இதன் காரணமாக பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப் பதற்காக, பெங்களூரு - வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் பெங்களூர் கே.எஸ்.ஆர் ரெயில் நிலையத்தில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி வழியாக வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளது.
வருகிற மே மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7:50 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரெயில் அன்று இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறு மார்க்கமாக சனிக்கிழமை இரவு 11:55 மணிக்கு வேளாங்கண்ணி யில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 11:45 மணிக்கு பெங்களூரு கே.எஸ்.ஆர் ரெயில் நிலையம் சென்றடையும்.
ரெயில் எண்.06547 பெங்களூரு - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் முதல் பயணமாக நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வருகிற மே மாதம் 6-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12:49 மணிக்கு வந்து 12:50 மணிக்கு வேளாங் கண்ணிக்கு புறப்படும்.
ரெயில் எண்.06548 வேளாங்கண்ணி - பெங்களூரு சிறப்பு ரெயில் மறு மார்க்கத்தில், நாமக்கல் ரெயில் நிலையத்துக்கு வருகிற மே மாதம் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5:09 மணிக்கு வந்து 5:10 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு செல்லும்.
இந்த ரெயில் ஏற்கனவே ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வருகிறது. வருகிற மே மாதம் முதல் இந்த ரெயில் நாமக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த ரெயிலுக்கு ஆதரவு கொடுத்து, இதன் மூலம் அதிக அளவில் பயணித்தால், இந்த ரெயில் நிரந்தரமாக நாமக்கல் வழியாக இயங்கும் என்று நாமக்கல் ரெயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் கார்த்திக் சென்னிமலை கூறினார்.
- நாமக்கல் மாவட்டத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 30 முதல் 80 சதவீதம் வரை இருக்கும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பகல் நேர வெப்பம் 39 டிகிரி செல்சியஸ் (102.2 டிகிரி பாரன்ஹீட்) வரை நிலவியது.
இன்று முதல் 30-ந் தேதி வரை, பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி வரை இருக்கும்.
வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 30 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் தென் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 2 முதல் 6 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நாளை 27-ந் தேதி 12 மி.மீ, 28-ந் தேதி 3 மி.மீ, 29-ந் தேதி 2 மி.மீ, 30-ந் தேதி 2 மி.மீ அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கால்நடை மற்றும் கோழி வளர்ப்போருக்கு
தற்பொழுது நாமக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இருப்பினும், பகல் நேரங்களில் வெப்ப சலனம் அதிகமாகி யுள்ளதால், பூச்சி இனப்பெருக்கம் அதிகமாகும். அதனால் கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும்.
ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடை மற்றும் கோழிப்பண்ணை களில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் கார்டை பயன்படுத்தலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 5 மில்லியுடன் ஒட்டும் திரவம் கலந்து பவர் கன் எந்திரத்தின் மூலம் தெளிக்க வேண்டும். ரசாயன மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக தர்பூசணி சாகுபடி செய்துள்ள பகுதியில் இலைப்பேன் தாக்குதலினால் சேதம் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊதா வர்ண ஒட்டும் பொறி ஒரு ஏக்கருக்கு 5 வீதமும், இலை வழி தெளிப்பானாக வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு 3 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மல்லிகையில் மகசூலை ஊக்குவிக்க இலை வழி தெளிப்பாக 3 சதவீதம் பஞ்சகாவிய கரைசல் மற்றும் லிட்டருக்கு 0.4 சதவீத ஹியுமிக் அமில கரைசலை 1 மாத கால இடைவெளியில் தெளிக்க வேண்டும். அத்துடன் இரும்பு சல்பேட் 0.5 சதவீத கரைசல் மற்றும் துத்தநாக சல்பேட் 0.5 சதவீத கரைசலை தெளிப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






