என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு  ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்நிலக்கடலை காய் ரூ.16.8 லட்சத்துக்கு விற்பனை
    X

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்நிலக்கடலை காய் ரூ.16.8 லட்சத்துக்கு விற்பனை

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்திவேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 229.90 குவிண்டால் எடை கொண்ட 717 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.19-க்கும், சராசரி விலையாக ரூ.76.50-க்கும் என ரூ.16 லட்சத்து 7ஆயிரத்து 665-க்கு விற்பனையானது.

    Next Story
    ×