search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Educational Tourism"

    • பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.
    • இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது .

    அந்த வகையில் 2023 -ம் ஆண்டுக்கான போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் கலை திருவிழா, விளையாட்டு, வானவில் மன்றம், சிறார் திரைப்படம், இலக்கிய மன்றம் உள்ளிட்ட பிரிவுகளில் வட்டார அளவில் போட்டிகள் நடைபெற்றன.

    அதில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். மாநில முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து 152 மாணவ- மாணவி கள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். இவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு ரஷ்யா, லண்டன், இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி சுற்றுலாவிற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    ஒவ்வொரு குழுவிலும் மாணவர்களை அழைத்துச் செல்ல 16 ஆசிரிய, ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தேர்வாகியுள்ள 7 மாணவ -மாணவிகளுடன் ஒரு ஆசிரியரும் ஒரு ஆசிரியை யும் வெளிநாடு சுற்றுலா செல்கின்றனர்.

    வெளிநாடு செல்லும் மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏழை மாணவ- மாணவிகளுக்கு ரூ. 50000 மதிப்பிலான சுற்றுலா செல்வதற்கான உடைமைகளை தன்னார்வலர்கள் வழங்கி உள்ளனர். தமிழக அரசு உத்தரவின் பேரில் இவர்கள் ஜூன் மாதம் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • மாணவர்களின் வருகையால் குறு, சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, அதன் 1300 ஆண்டு, வரலாற்றை அறிந்து கொள்ளும் விதமான தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி ஆசிரியர்கள் அழைத்து வருகிறார்கள்.

    சுற்றுலா பயணிகளின் வருகையில் முதலிடம் பிடித்த டெல்லி தாஜ்மஹாலை, மாமல்லபுரம் மிஞ்சியது. அதேபோல் தற்போது கல்வி சுற்றுலா என்றதும் பள்ளி மாணவ-மாணவிகளிடம் முதல் இடம் பிடிப்பது மாமல்லபுரமாக மாறி வருகிறது.

    ஏற்கனவே சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்பு, செஸ் ஒலிம்பியாட், காத்தாடி திருவிழா, ஜி-20, சவுண்ட் ராக்கெட் என பிரபலமான மாமல்லபுரம் தற்போது கல்வி சுற்றுலாவிலும் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது., பள்ளி மாணவர்கள் அதிகளவில் வருவதால் புராதன சின்னங்கள் அருகே கடை வைத்திருக்கும் குறு, சிறு வியாபாரிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    ×