என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் புகழேந்தி (வயது 21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் 14 வயது சிறுமியை, ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி புகழேந்தியிடம் இருந்து சிறுமியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சிறுமியை கடத்திய புகழேந்தி மீது, பரமத்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். 

    • பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • தனியார் கல்லூரி பஸ் உட்பட 5 வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமலும், பொது‌சாலையில்‌ இயக்கப் பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் மற்றும் கபிலர்மலை பகுதிகளில் நாமக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகன், உமா மகேஸ்வரி மற்றும் பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் தனியார் கல்லூரி பஸ் உட்பட 5 வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமலும், பொதுசாலையில் இயக்கப் பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வரும் வாகனங்களை, பலர் வாடகை வாகனங்களாக இயக்குவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் அளிக்கப்பட்ட புகார் மனு அடிப்படையிலும் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப் பட்டது.

    இதே போல் திடீர் ஆய்வு நடத்தி வரி ஏய்ப்பு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • டீக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் பாலாஜி (வயது 43). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவர்கள் நாமக்கல் நகர போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்தபோது, பாலாஜி கடன் தொல்லையால் தவித்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட விரக்தியில் எங்காவது சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, பாலாஜியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மரவள்ளி கிழங்கில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுகிறது.
    • விலை கட்டுப்படியாகாமல், சிறு ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது தேவை குறைந்துவிட்டதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், மணியனூர், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில், பெரியசோளி பாளையம், ஆனங்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் ஜவ்வரிசி ஆலைக்குச் செல்லும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.15 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.2,000 வரை குறைந்து, ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    இதேபோல், கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை குறைந்து, ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர்கள் நோய் தாக்குதலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

    அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மரவள்ளி கிழங்கில் நீர்ச்சத்து குறைந்து காணப்படுகிறது.

    கடந்த வாரம் வரை, அதிக விலைக்கு மரவள்ளி கிழங்கு விற்கப்பட்டது. விலை கட்டுப்படியாகாமல், சிறு ஜவ்வரிசி ஆலைகள் மூடப்பட்டு விட்டன. எனவே தற்போது தேவை குறைந்துவிட்டதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார்.
    • மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், வாரம்தோறும் புதன் கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி கலையரசன் உத்தர விட்டுள்ளார். இதை யொட்டி இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற முகாமிற்கு எஸ்.பி.கலை யரசன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் சார்பில் குடும்பப்பிரச்னை, சொத்துப்பிரச்னை உள்ளிட்டவை குறித்து மொத்தம் 99 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அவற்றைப் பெற்றுக் கொண்ட எஸ்.பி மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வில், ஏ.டி.எஸ்.பி.க்கள் கனகேஸ்வரி, ராஜு, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை மனுக்களின் மீது விசாரணை நடத்தி பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்கினர்.

    • உலக நன்மை வேண்டி குரு உபசார பூஜை மற்றும் கலச ஹோமம் பூஜை நடைபெற்றது.
    • உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த குரு உபச்சார பூஜை மற்றும் கலச ஹோம பூஜையை வராச்சாரியார்கள் நடத்தினார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் உள்ள விநாயகர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி குரு உபசார பூஜை மற்றும் கலச ஹோமம் பூஜை நடைபெற்றது.

    இதனையொட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி, புனித நீர் எடுத்து வந்து கலசத்தில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஹோம பூஜை நடைபெற்றது.

    உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த குரு உபச்சார பூஜை மற்றும் கலச ஹோம பூஜையை சிவராச்சாரியார்கள் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து விநாயகர், தட்சிணாமூர்த்தி, பாலசுப்பிரமணியர் சாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடைபெற உள்ளது.
    • ( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்)

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசரகால மருத்துவ உதவியாளர் பணி யிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடைபெற உள்ளது.

    மருத்துவ உதவியாளர்க ளுக்கு பி.எஸ்.சி. நர்சிங், அல்லது ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, அல்லது ( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) லைப் சையின்ஸ் பட்டதாரி, பிஎஸ்சி ஜுவாலஜி, பாட்டனி பையோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். ஆண் பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம்.

    மருத்துவ உதவியா ளர்கான பணிக்கு எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூரியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். ஊதியம் ரூ.15,435 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்பட்ட வர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 50 ஆண்டுகளாக, பள்ளிபாளையத்தின் பொருளாதார வளர்ச்சியில் விசைத்தறி தொழில் பெரும் பங்காற்றி வருகிறது.
    • ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் விசைத்தறி தொழிற்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகரில் நெசவுத்தொழில் பிரதானமாக உள்ளது. கைத்தறியில் இருந்து மெல்ல விசைத்தறிக்கு மாறிய பின்னர் தான், நெசவுத்தொழில் நல்ல வளர்ச்சியை பெற்றது. வீடுகளில் இயங்கிய விசைத்தறிகள், விசைத்தறி பட்டறைகளாக மாற்றம் பெற்றன.

    கடந்த 50 ஆண்டுகளாக, பள்ளிபாளையத்தின் பொருளாதார வளர்ச்சியில் விசைத்தறி தொழில் பெரும் பங்காற்றி வருகிறது. வேட்டி, சட்டை, சுடிதார், லுங்கி உள்பட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. இந்த தொழிலை, நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

    விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி, சதவீத அடிப்படையில் கூலி உயர்வு வழங்கப்படுகிறது.

    கடைசியாக போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்துவிட்டதால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். இதை தொடர்ந்து ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் விசைத்தறி தொழிற்சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது.

    இதையெடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி, பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தொழிற் சங்கத்தினர் இடையே முதல் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. அதில், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 3 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதாக தெரிவித்தனர். இதை தொழிற்சங்கத்தினர் ஏற்கவில்லை.

    இதை தொடர்ந்து 2-ம் கட்ட பேச்சு கடந்த 18-ந் தேதி நடந்தது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது.

    இந்த பேச்சு வார்த்தையில் பள்ளிபாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகளும், தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதில் உரிமையாளர்கள் சங்கத்தினர் 5 சதவீதம் அளிப்பதாக தெரிவித்தனர். தொழிற்சங்கத்தினர் 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து 4-வது கட்ட பேச்சுவார்த்தை வருகிற 3-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
    • கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபிலர் மலை, செல்லப்பம்பாளையம், நகப்பாளையம், சேமங்கி, வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோயில், மூலமங்கலம், பேச்சிப்பாறை, நடையனூர், முத்தனூர், கவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பூக்களை பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் இரண்டு பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ குண்டுமல்லி நேற்று 300 ரூபாய்க்கும், கடந்த வாரம் 220 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 100 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி நேற்று 160 ரூபாய்க்கும், ரூ.300-க்கு விற்பனையான செவ்வந்தி தற்பொழுது ரூ

    .250-க்கும், ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்திப்பூ 200 ரூபாய்க்கும், ரூ.250-க்கு விற்பனையான ரோஜா தற்பொழுது ரூ.170-க்கும் ,ரூ.500 ரூபாய்க்கு விற்பனையான காக்கட்டான் ரூ.300-க்கும் விற்பனையானது.

    பூக்கள் விலை சரிந்ததால் அதை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள்கூறுகையில், கோடை காலம் தொடங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும், அதனால் பூக்களின் வரத்தை அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் குண்டு மல்லி பூ மேலும் விலை சரிவடையும். வருகிற வைகாசி மாதம் சுபமுகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றனர்.

    • நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
    • வெற்றிலை தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்த னூர் , பாண்டமங்கலம், அண்ணாநகர், வெங்கரை, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் நூற்றுக் கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டு கின்றனர்.

    பின்னர் உள்ளுர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும் , பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங் கலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூர் -கரூர் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள வெற்றிலை தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின் றனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.3 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது.

    தற்பொழுது வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும் ,கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4,500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று 2 ஆயிரத்து 500-க்கும் விற்பனையாகிறது. வெற்றிலை வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது.
    • இந்த பகுதியில் தயிர், மோர் விற்பனைகளை கட்டி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 40 டிகிரி செல்சியசுக்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. வெயிலில் வேலை செய்பவர்கள், வேலைக்கு வெளியே செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானம் மற்றும் பழரச கடைகளுக்கு படை எடுக்கின்றனர். மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரும் தயிர், மோர் உள்ளிட்டவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

    இதனால் இந்த பகுதியில் தயிர், மோர் விற்பனை களை கட்டி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் அதிகளவில் மோர் உள்ளிட்டவற்றை வாங்கி பருகி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து, குடிநீருக்காக பேரூராட்சி நிர்வாகம் சப்ளை செய்கின்றனர். ஆனால் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள மோர் கடைகளில், ஆற்றில் வரும் நீரை சுத்திகரிக்காமல், அப்படியே மோரில் கலந்து விற்பனை செய்கின்றனர்.

    முறையான உணவு பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் பின்பற்றுவதில்லை. எனவே இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பரமத்திவேலூர் பேட்டையில் ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேட்டையில் ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    இதனையொட்டி, நேற்று காலை கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வந்து கோவிலில் முன்பு நடப்பட்ட கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர்.

    நாளை மறுநாள் பூச்சொரிதல் விழாவும், மே 1-ந் தேதி அக்னி சட்டி எடுத்து வடிசோறு வைத்து பூஜை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மே 2-ந் தேதி நடக்கிறது. 3-ந் தேதி பொங்கல், மாவிளக்கு பூஜையும், 5-ந் தேதி மஞ்சள் நீராடல் மற்றும் அம்மன் முத்துப்பல்லக்கில் உலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    ×