search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூரில் பேட்டை ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்
    X

    கோவில் திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.  

    பரமத்திவேலூரில் பேட்டை ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்

    • பரமத்திவேலூர் பேட்டையில் ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேட்டையில் ஸ்ரீ புது மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரையில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    இதனையொட்டி, நேற்று காலை கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடம் எடுத்து வந்து கோவிலில் முன்பு நடப்பட்ட கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர்.

    நாளை மறுநாள் பூச்சொரிதல் விழாவும், மே 1-ந் தேதி அக்னி சட்டி எடுத்து வடிசோறு வைத்து பூஜை நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி மே 2-ந் தேதி நடக்கிறது. 3-ந் தேதி பொங்கல், மாவிளக்கு பூஜையும், 5-ந் தேதி மஞ்சள் நீராடல் மற்றும் அம்மன் முத்துப்பல்லக்கில் உலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×