என் மலர்
நீங்கள் தேடியது "rain from today"
- நாமக்கல் மாவட்டத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 30 முதல் 80 சதவீதம் வரை இருக்கும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பகல் நேர வெப்பம் 39 டிகிரி செல்சியஸ் (102.2 டிகிரி பாரன்ஹீட்) வரை நிலவியது.
இன்று முதல் 30-ந் தேதி வரை, பகல் நேர அதிகபட்ச வெப்ப நிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி வரை இருக்கும்.
வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 30 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் தென் கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 2 முதல் 6 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
நாளை 27-ந் தேதி 12 மி.மீ, 28-ந் தேதி 3 மி.மீ, 29-ந் தேதி 2 மி.மீ, 30-ந் தேதி 2 மி.மீ அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கால்நடை மற்றும் கோழி வளர்ப்போருக்கு
தற்பொழுது நாமக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இருப்பினும், பகல் நேரங்களில் வெப்ப சலனம் அதிகமாகி யுள்ளதால், பூச்சி இனப்பெருக்கம் அதிகமாகும். அதனால் கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும்.
ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடை மற்றும் கோழிப்பண்ணை களில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் கார்டை பயன்படுத்தலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இதனை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 5 மில்லியுடன் ஒட்டும் திரவம் கலந்து பவர் கன் எந்திரத்தின் மூலம் தெளிக்க வேண்டும். ரசாயன மருந்து தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக தர்பூசணி சாகுபடி செய்துள்ள பகுதியில் இலைப்பேன் தாக்குதலினால் சேதம் தென்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊதா வர்ண ஒட்டும் பொறி ஒரு ஏக்கருக்கு 5 வீதமும், இலை வழி தெளிப்பானாக வேப்ப எண்ணெய் ஒரு லிட்டருக்கு 3 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
மல்லிகையில் மகசூலை ஊக்குவிக்க இலை வழி தெளிப்பாக 3 சதவீதம் பஞ்சகாவிய கரைசல் மற்றும் லிட்டருக்கு 0.4 சதவீத ஹியுமிக் அமில கரைசலை 1 மாத கால இடைவெளியில் தெளிக்க வேண்டும். அத்துடன் இரும்பு சல்பேட் 0.5 சதவீத கரைசல் மற்றும் துத்தநாக சல்பேட் 0.5 சதவீத கரைசலை தெளிப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.






