என் மலர்
நீங்கள் தேடியது "Sankara Jayanti Festival"
- ராஜராஜேஸ்வரி அம்மன் மடாலயத்தில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
- விழாவை முன்னிட்டு 3 நாட்கள் சங்கரர் வரலாறு படிக்கப்பட்டு, சங்கர ஜெயந்தியான நேற்று நிறைவடைந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் மடாலயத்தில் சங்கர ஜெயந்தி விழா கொண்டா டப்பட்டது.
விழாவை முன்னிட்டு 3 நாட்கள் சங்கரர் வரலாறு படிக்கப்பட்டு, சங்கர ஜெயந்தியான நேற்று நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து சங்கரர் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு வகையான கனி வைத்து சிறப்பு பஜனைகள் பாடப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கரரை வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.






