மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் பலி

தனியார் கல்லூரி முன்பு, மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து செல்ல முயன்றார். கோவையிலிருந்து வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமார பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒருவர் பலி
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் வட்டமலை, காந்தி நகரில் வசிப்பவர் ரவிக்குமார் (வயது 36.). தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்று காலை, எதிர்மேடு, தனியார் கல்லூரி முன்பு, மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவையிலிருந்து வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமார பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோ தித்த டாக்டர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை செய்து வருகிறார்கள்.

மற்றொரு விபத்து

ஈரோடு மாவட்டம், சித்தார் பகுதியில் வசிப்பவர் சதீஸ்குமார் (28.) இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் தன் நண்பனை பார்ப்பதற்காக, குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளை யம், மணி போட்டோ ஸ்டூடியோ அருகே வந்த போது, எதிரில் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் வந்த வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்தார். இவரை பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com