என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் பேரூராட்சியில் மாற்று பணியில் ஈடுபட்ட7 தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரி விளக்கம் கேட்டு நோட்டீஸ்
- தினசரி தள்ளு வண்டிகளில் 18 வார்டுகளுக்கு சென்று குப்பையை சேகரிப்பதற்கு என 110 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
- பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தூய்மை பணியாளர்களை தீவிரமாக கண்காணித்து வந்தார்.
பரமத்திவேலூர்,
ஏப். 23-
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்கு தினசரி தள்ளு வண்டிகளில் 18 வார்டுகளுக்கு சென்று குப்பையை சேகரிப்பதற்கு என 110 தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தூய்மை பணியாளர்கள் சிலர் பணிக்கு வந்து விட்டு பின்னர் தங்களது சொந்த வேலைக்கு சென்றுவிடு வதாக பேரூராட்சி செயல் அலுவலருக்கு புகார் வந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தூய்மை பணியாளர்களை தீவிரமாக கண்காணித்து வந்தார். அப்போது 7 தூய்மை பணியாளர்கள் வேலைக்கு வந்துவிட்டு, மாற்று வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து செயல் அலுவலர் பணிக்கு வந்து விட்டு வேலை செய்யாமல் சொந்த பணிக்கு சென்ற 7 பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வ குமார் கூறியதாவது:-
பேரூராட்சி பணிக்கு வந்து வேலை செய்யாமல் தனது சொந்த வேலைக்கு செல்வதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் துப்புரவு பணியாளர்களை கண்காணிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதில் பணியை சரிவர செய்யாத தூய்மை பணியாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பேரில் பணிக்கு வந்து வேலை செய்யாமல் சொந்த வேலைக்கு சென்ற 7 தூய்மை பணியாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வார காலத்துக்குள் சரியான விளக்கம் தராவிட்டால் மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






