பள்ளிப்பாளையம் அருகே2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பள்ளிப்பாளையம் அருகே2 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
Published on

நாமக்கல்,ஏப்.23-

பள்ளிப்பாளையம் அருகே வெப்படையில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில், எஸ்.ஐ.க்கள் மலர்விழி, சண்முகம் மற்றும் ஏட்டுகள் பிரவீன், சரவணன் ஆகி யோர் சின்னார்பாளையம் அருகே, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒருவீட்டுக்கு சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் போலீசார் வீட்டில் சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது சம்மந்தமாக, வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில் வடமா நிலத்தை சேர்ந்த வாலி பர்கள் வெப்படை பகுதி யில், வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் வீட்டு உரிமையாளர் முருகேஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமு தல் செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். அதனை பதுக்கி வைத்த வட மாநில வாலி பர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com