பரமத்திவேலூர்பேட்டை புது மாரியம்மன் கோவிலில் 108 கலச, குத்துவிளக்கு பூஜை

புது மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 கலச பூஜை நடைபெற்றது.இதில் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவிலில் 108 கலச பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
பரமத்திவேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவிலில் 108 கலச பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 கலச பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு யாகம் மற்றும் புது மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப் பட்டது. சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாலை 108 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com