என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramadan special prayer"

    • மஜ்ருலூம் கல்லூரியில் 10 ஆயிரம் பேரும் உமராபாத் மசூதிகளில் 2 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்றனர்
    • மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், ஆம்பூர் வாணியம்பாடி ஈத்கா மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஆம்பூர் மஜ்ருலூம் மேல்நிலைப் பள்ளியில் 20 ஆயிரம் பேரும் துத்தி பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் 20 ஆயிரம் பேரும் மஜ்ருலூம் கல்லூரியில் 10 ஆயிரம் பேரும் உமராபாத் மசூதிகளில் 2 ஆயிரம் பேர் தொழுகையில் பங்கேற்றனர். பேர் பெரியாங்குப்பம் மின்னூர் சோலூர் மாதனூர் அருங்கல்துருகம் ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது.

    இதேபோல திருவண்ணாமலை, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், கண்ண மங்கலம், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. மசூதிகளில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசலில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு அமைதி ஊர்வலம் மற்றும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

      முன்னதாக ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலை வழியாக பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் பள்ளி வாசலை வந்தடைந்தது.

      தொடர்ந்து பள்ளி வாசல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் ஒருவரை ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

      இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி தலைவர் சவான் சாகிப், நிர்வாக கமிட்டி செயலாளர் இக்பால், ஹஜ்ரத் ஷகன்ஷா அவுலியா தர்ஹா பள்ளி வாசல் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்த னர். இதேபோல் பரமத்தி, பாலப்பட்டியிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடை பெற்றது.

      ×