என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில்தெருநாய்கள் சண்டையிட்டதில் வாகனத்தில் சென்றவர் காயம்
    X

    குமாரபாளையத்தில்தெருநாய்கள் சண்டையிட்டதில் வாகனத்தில் சென்றவர் காயம்

    • நேற்று இரவு பள்ளிபாளையம் சாலை, பெருமாபாளையம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.
    • நாய்கள் சண்டை போட்டு கொண்டு இவரது டூவீலரில் வந்து மோத, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் பாலமுருகன்(35.) டூவீலர் மெக்கானிக். நேற்று இரவு பள்ளிபாளையம் சாலை, பெருமாபாளையம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய்கள் சண்டை போட்டு கொண்டு இவரது டூவீலரில் வந்து மோத, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் பெருந்துறை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அனைத்து பகுதியிலும் தெரு நாய்கள் அதிகம் ஆனதால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×