search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "essay"

    • பேரணிக்கு துறை நிலைய அலுவலர் ஜோதி தலைமை வகித்தார்.
    • தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கு துறை நிலைய அலுவலர் ஜோதி தலைமை வகித்தார்.

    கல்லூரி நிர்வாக குழு துணை தலைவர் விசாகர், நிதி செயலாளர் ராஜ்கமல் , கல்லூரி முதல்வர் அருள் செல்வன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முத்து குமாரசாமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

    • டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா சார்பில் முத்தமிழ் திருவிழா -2023 அக்டோபர் 26, 27ந் தேதிகளில் நடக்கிறது.
    • பிற மொழிகளில் எழுதுவோர் தமிழில் அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்ப வேண்டும்.

    திருப்பூர்:

    முத்தமிழ் திருவிழா -2023 மலரில் இடம்பெற தமிழ் இலக்கிய, இலக்கண கட்டுரைகளை 31ந் தேதிக்குள் அனுப்பலாம் என திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா சார்பில் முத்தமிழ் திருவிழா -2023 அக்டோபர் 26, 27ந் தேதிகளில் நடக்கிறது. ஆன்மிக பெரியோர்கள், ஆதீனகர்த்தர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர் பங்கேற்கின்றனர்.

    தமிழ்மொழியின் இலக்கிய, இலக்கணங்களை ஆவணப்படுத்தும் நோக்கில் பல்வேறு கருத்தரங்குகள் நடக்கின்றன. பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆய்வுக்கட்டுரைகளை பெற்று தொகுப்பு மலர் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை இப்பணியை ஒருங்கிணைக்கிறது.

    தமிழ்மொழி, இலக்கியம், இலக்கணம், தமிழும் பிற மொழிகளும், தமிழின் பண்பாடு, வரலாறு, மாட்சிமைத்திறன், அறிவியல் மற்றும் கல்வி சிந்தனை சார்ந்த பொருளில் கட்டுரைகள் இருக்க வேண்டும்.பிற மொழிகளில் எழுதுவோர் தமிழில் அதன் மொழிபெயர்ப்பையும் அனுப்ப வேண்டும். கட்டுரைகள், ஏ4 அளவு தாளில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    muthamilthiruvizhakovai2023@gmail.com அல்லது 80726 54314 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் அனுப்பலாம். கட்டுரைகளை ஜூலை 31ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    கட்டுரையாளரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80726 54314, 86103 25998 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என திருக்கோவில் திருத்தொண்டர் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

    • ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    பள்ளி, கல்லூரி மாண வர்களிடையே பேச்சாற்ற லையும், படைப்பாற்ற லையும் வளர்க்கும் நோக்கத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022 - 2023-ம் ஆண்டுக்கான, மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    இப்போட்டிகளில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.

    இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். போட்டிக ளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவி கள், அந்தந்த கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை பெற்று நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வழங்குதல் வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொள்ள லாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.

    • மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புத்தக கல்வியோடு சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனையை மேம்படுத்தவும் இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் மன்றங்களை மீண்டும் புதுப்பித்து மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி திருப்பூா் மாவட்ட அளவிலான 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தொடங்கிவைத்தாா்.

    பேச்சுப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள், கட்டுரைப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள் என மொத்தம் 100 மாணவா்கள் பங்கேற்றனா். பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி, கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி என மொத்தம் 4 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

    இதில் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் செங்கப்பள்ளி தலைமை ஆசிரியா் உதயகுமாா், பிச்சம்பாளையம் தலைமை ஆசிரியா் லட்சுமிபதி ஆகியோா் கலந்து கொண்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.

    • தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பள்ளி கல்வித்துறை ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவை தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் நிறுவனர் படத்தை அரசர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலாயுதம் திறந்து வைத்தார்.

    தஞ்சை சுழற்சங்கம் கிரானரி செயலர் ராமமூர்த்தி, தலைவர் ஆல்பர்ட், கொடையாளர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இவ்விழாவில் தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

    பள்ளிகளில் சிறப்பாக ஜே.ஆர்.சி. செயல்பாடுகளை செய்த ஊராட்சி நடுநிலைப்பள்ளி கூத்தூர் தமிழ்மாறன், வளம்பகுடி பாலகிருஷ்ணன், செம்மங்குடி ராணி, திருப்பழனம் உக்கடை அம்மாள் உயர்நிலைப்பள்ளி லதா, அருள்நெறிஉயர்நிலை ப்பள்ளி முருகன் ஆகியோருக்கு சிறந்த கவுன்சிலர் விருதை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் வழங்கினார்.

    முன்னதாக இணை கன்வீனர் பாலமுருகன் வரவேற்றார்.

    இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் முத்துக்குமார், கௌரவ ஆலோசகர் ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இணை கன்வீனர்கள் அமர்நாத் ,தமிழன்பன் ஆகியோர் நன்றி கூறினர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கன்வீனர் பிரகதீசு செய்திருந்தார்.

    • கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
    • கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடையநல்லூர் நகராட்சி எனது குப்பை - எனது பொறுப்பு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நகராட்சி நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விருது மற்றும் நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் மாவட்ட 11, 12-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சிவஞானம் பரிசுத்தொகை வழங்கினார்.

    விருதுநகர்:

    தமிழகப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பேச்சுத்திறன் மற்றும் படைப்புத்திறனை வெளிக் கொணரும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நடைபெற்ற போட்டி களில், கவிதைப் போட்டியில் திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவீட்டி சுவேதா முதலிடத்தினையும், மே.சின்னையாபுரம் தேவ சகாயம் அன்னத்தாயம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராஜலட்சுமி 2-ம் இடத்தையும், விருதுநகர் வித்யா பதின்ம மேல்நிலைப் பள்ளி மாணவி திவ்யா 3-ம் இடத்தினையும் பெற்றனர்.

    கட்டுரைப்போட்டியில் சாரதா சக்தி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி முதலிடத்தினையும், திருத்தங்கல் சிவசுப்பிரமணிய நாடார் குருவம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோதிகா 2-ம் இடத்தினையும், சாத்தூர் சா.இ.நா.எட்வர்டு மேல் நிலைப்பள்ளி மாணவன் திருச்செந்தில் 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    பேச்சுப்போட்டியில் ராஜ பாளையம் ரமணா வித்யாலயா மாணவி நேக மீனா முதலிடத்தினையும், விருதுநகர் வித்யா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 2-ம் இடத்தையும், வில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவி விஷ்ணுப்பிரியா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு ரூ.66 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

    நிகழ்வுகளில் விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச் சித்துறை உதவி இயக்குநர் சுசிலா உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×