விழிப்புணர்வு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.
Published on

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடையநல்லூர் நகராட்சி எனது குப்பை - எனது பொறுப்பு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நகராட்சி நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விருது மற்றும் நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com