search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு
    X

    தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்களில் திருத்தம் செய்ய வாய்ப்பு

    • தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
    • 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் (ஐ.டி.ஐ) சேர்க்கை பெற்று, தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களின், தேசிய தொழிற் சான்றிதழ்களில் (நேஷனல் டிரேட் சர்டிபிகேட்) திருத்தங்கள் ஏதும் இருப்பின், முன்னாள் பயிற்சியாளர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியா ளர்கள், தங்களது தேசிய தொழிற்சான்றிதழ்களில் பயிற்சியாளர்களின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், போட்டோ, பிறந்த தேதி போன்றவற்றில் திருத்தம் ஏதும் இருப்பின், பின்வரும் அசல் கல்வி ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களுடன், நாமக்கல் கீரம்பூர், தட்டாங்குட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    தேசிய தொழிற்சான்றி தழ்களில் திருத்தம் செய்ய விரும்புவோர், 10-ம் வகுப்பு அல்லது 8-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ், ஐ.டி.ஐ மாற்று சான்றிதழ், தேசிய தொழிற்சான்றிதழ், ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, 2 புகைப்படம் மற்றும் பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்.

    மேலும், இது தொடர்பான விபரங்க ளுக்கு, கொண்டி செட்டிப்பட்டியில் உள்ள, மாவட்ட திறன் பயற்சி அலு வலக உதவி இயக்குனரை அணுகி கூடுதல் தகவல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×