என் மலர்
நாமக்கல்
- கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.
- அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி லதா (வயது 40). இவர் திண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.
இந்த நிலையில் லதாவின் கணவர் பூபதி, மாலை வரை தனது மனைவி வீட்டுக்கு வராதால் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூபதி, பல்வேறு இடங்களில் லதாவை தேடி உள்ளார்.
எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பரமத்தி போலீசில் பூபதி புகார் செய்தார். அதன்பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய் துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் லதா, தானாக எங்காவது சென்று விட்டா ரா? அல்லது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் கிராம நிர்வாக அலுவலர் திடீரென மாய மான சம்பவம் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் சார்பில் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரன் தலைமை தாங்கி பேசினார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் சார்பில் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரன் தலைமை தாங்கி பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மோனிகா வரவேற்றார்.
செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டிச் செல்லக்கூடாது. 18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனத்தை ஓட்டி சென்றால் அவர்களது பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும். குடிபோதையில் வாகனத்தை ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்லக்கூடாது. ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து செல்லக்கூடாது போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- செம்மேட்டில் சீக்குப்பாறை, சேலூர், கோயிலூர் வியூ என 3 வியூ பாயின்ட்கள் அருகருகே அமைந்துள்ளன.
- அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
சேந்தமங்கலம்:
இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளது. இதனால் இங்கு எல்லாம் சீசனிலும் சுற்றுலா பயணிகள் வருகைப்புரிவார்கள். குறிப்பாக கொல்லிமலை முக்கிய இடமாக இருப்பது ஆகாய கங்கை, மாசிலா அருவி, அறப்பள்ளீஸ்வரர், கொல்லிபாவை என பல இடங்கள் உள்ளது.
70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். இங்கிருந்து வழிநெடுகிலும் லாட்ஜ், ஹோட்டல், ரிசார்டுகள் காணப்படுகின்றன.
செம்மேட்டில் சீக்குப்பாறை, சேலூர், கோயிலூர் வியூ என 3 வியூ பாயின்ட்கள் அருகருகே அமைந்துள்ளன.
இந்த மூன்றும் கொல்லிமலையின் அழகை ரசிக்க உதவுகின்றன. செம்மேட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் 'அறப்பளீஸ்வரர் கோயில்' அமைந்திருக்கிறது.
அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. இங்கு வரும் தண்ணீரானது பல்வேறு மூலிகை மரம் மற்றும் செடிகளை கடந்து வருவதால் மூலிகை நறுமணம் வீசும். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வானில் இருந்து நீர் வீழ்வது போல் இருப்பதால் பார்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும்.
இங்கு செல்வதற்கு நுழைவு கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். நல்ல உடல்நிலை இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஏனென்றால் படிகள் மிகவும் செங்குத்தாக இருப்பதால் இறங்குவதும், ஏறுவதும் கடினம். கிட்டத்தட்ட 140 அடி உயரம்கொண்டது இந்த அருவி.
படிக்கட்டுகளில் இறங்கி அருவிக்கு அருகில் செல்ல, செல்ல அருவியில் கொட்டும் தண்ணீரில் இருந்து வரும் சாரல் முழுவதுமாக குளித்தது போல மாற்றிவிடும். ஆகாய கங்கை அருவி கிட்டத்தட்ட 300 அடி உயரம்கொண்டது. இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும்.
ஆகாய கங்கை பார்க்கும்போது இயற்கையின் ஒட்டு மொத்த அழகையும் நம்ம கண் முன்னாடி தோன்றும். மேலே இருந்து விழும் தண்ணீர் ஊசி போன்று நம் உடல்மேல் படும். இதனால் ஊசி அருவியும் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. மலைகளுக்கிடையே உள்ள ஓர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
இதில் ஏப்ரல் மே, ஜூன் மாதங்கள் குறைந்த அளவே நீர் வருகிறது . ஜுலை மாதங்களில் மழைக்காலங்களில் சீசன் ஆரம்பிக்கிறது.
தற்போது நம் அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையும் முற்றிலும் குறைந்து காணப்பட்டது. அருவில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத் திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும் வாங்கிச் சென்றனர்.
- வெற்றிலை வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, செல்லப்பம்பாளையம்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்திவேலூர் கரூர் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2500-க்கும் வாங்கிச் சென்றனர்.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத் திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும் வாங்கிச் சென்றனர்.
வெற்றிலை வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- நேற்று இவர் லாரியில் காட்டன் பேல்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிராவில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள ஸ்பின்னிங் மில்லுக்கு சென்று கொண்டிருந்தார்.
- இரவு 10 மணியளவில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் கரட்டுப்பாளை யம் பிரிவு சாலை பகுதியில் லாரி சென்றபோது, லாரியின் என்ஜினில் இருந்து புகை வந்தது.
பரமத்திவேலூர்:
சேலம் அருகே மகுடஞ்சாவடியை அடுத்த உலகப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்த். நேற்று இவர் லாரியில் காட்டன் பேல்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிராவில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள ஸ்பின்னிங் மில்லுக்கு சென்று கொண்டிருந்தார்.
இரவு 10 மணியளவில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் கரட்டுப்பாளை யம் பிரிவு சாலை பகுதியில் லாரி சென்றபோது, லாரியின் என்ஜினில் இருந்து புகை வந்தது.
இதை பார்த்த வசந்த், லாரியை சாலை ஓரமாக நிறுத்தினார். அப்போது திடீரென லாரியில் தீப்பிடித்து, அதிலிருந்த காட்டன் பேல்கள் எரிய ஆரம்பித்தது. உடனடியாக திருச்செங்கோடு, நாமக்கல், வேலாயுதம்பாளையம் மற்றும் ஜேடர்பாளையம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் 4 வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டன் பேலில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீரை பீச்சி அடித்தனர். பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரன் வரவழைக்கப்பட்டு, லாரியில் இருந்த காட்டன் பேல்களை அவசர அவசரமாக கீழே தள்ளினர். இருப்பினும் லாரி தீயில் எரிந்து நாசமானது.
காட்டன் பேல்களும் தீயில் முற்றிலும் எரிந்து விட்டது.
- கடந்த 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டுத் தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
- மதுபான சில்லரை விற் பனைக் கடை அருகே கள்ள மார்க்கெட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சுந்தர்ராஜன் என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக் கண்ணன் தலைமையில் கலால்துறை உதவி கமிஷனர் மற்றும் போலீசாருடன் கடந்த 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூட்டுத் தணிக்கை மேற் கொள்ளப்பட்டது.
அப்போது மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த பரமத்திவேலூர், மோகனூர், செங்கப்பள்ளி, கபிலர்மலை, திம்மநாய்க்கன் பட்டி, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, மெட்டாலா மற்றும் செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை பணியாளர்களுக்கு ரூ.70 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அனுமதியின்றி இயங்கி வந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட்டன. மதுபான சில்லரை விற் பனைக் கடை அருகே கள்ள மார்க்கெட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சுந்தர்ராஜன் என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கடை மேற் பார்வையாளர் சுப்புராஜா மற்றும் விற்பனையாளர் செல்வராஜ் ஆகியோர் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை யொட்டி 2 பணியாளர்கள் தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- வெயிலின் தாக்கத்தால் வாடிய பயிர்களும் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி.கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, இருக்கூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து பலத்த இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. அப்போது, திடீரென இடித்த இடியின் காரணமாக பல வீடுகளில் மின்விசிறி, டிவி, பிரிட்ஜ், பல்பு உள்ளிட்டவை பழுதடைந்தன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர். மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் இரு சக்கர வாகனத்தில் சென்ற வர்கள், நடந்து சென்ற பொதுமக்கள், நனைந்து கொண்டே சென்றனர்.
அதேபோல் சாலையோர ங்களில் போடப்பட்டு இருந்த கட்டில் கடைகள், மண்பானை விற்பனை கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், பலகார கடைகள், சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வாட்டி வந்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் பூமியின் சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசணம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெயிலின் தாக்கத்தால் வாடிய பயிர்களும் துளிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.
- மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தெற்கு நல்லியாம்பாளையம், வடக்கு நல்லியாம் பாளையம், வெட்டுக் காட்டுப்புதூர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங் களில் மழை நீர் சுல்தான்பேட்டையில் உள்ள ஓடை புறம்போக்கு வழியாகச் சென்று ராஜா வாய்க்காலில் கலந்து விடும். மழை அதிகமாக பெய்யும் போது அப்பகுதி முழுக்க மழை நீர் குட்டை போல் தேங்கி நிற்கும். பரமத்தி வேலூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பிரதான சாலை யில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புடைய இந்த ஓடை புறம்போக்கு நிலத்தை சிலர் சுத்தம் செய்து ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் புறம்போக்கு இடத்தில் கட்டிட பணி ஆரம்பிக்க தயார் செய்து வருகின்றனர். மழைநீர் செல்ல ஏதுவாக இருந்த அந்த பள்ளத்தை மண் கொட்டி மேடாக்கி உள்ளனர். இதனால் மழை பெய்யும் போது, தண்ணீர் சாலையில் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் சென்று பார்வை யிட்டார். பின்னர், உடனடி யாக ஆக்கிரப்பு செய்த நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார்.
அந்த நோட்டீஸில், வேலூர் முதல் நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு சுல்தான் பேட்டை பகுதியில் ஓடை புறம்போக்கு இடத்தில் மண் கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மண் கொட்டி உள்ள இடத்தில் கட்டிட பணி துவங்க ஏதுவாக ஏற்பாடு செய்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடத்தினை நேரில் ஆய்வு செய்ததில், சாலை மட்டத்திற்கு மேல் மண் கொட்டப்பட்டு உள்ளது என தெரிய வருகிறது.
இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 3 தினங்களுக்குள் மண் மேட்டினை அப்புறப்படுத்தி சாலையின் உயரத்துக்கு கீழ் உள்ளவாறு சீர் செய்ய வேண்டும். குறித்த காலத்துக்குள் அவ்விடத்தை சரி செய்ய தவறும் பட்சத்தில் உரிய சட்ட விதிகள் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
- 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்:
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித்குமார் மற்றும் பன்னீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,500 கிலோ ரேசன் அரிசி மற்றும் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 500 அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
- தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்:
தமிழக முழுவதும் பிடிவாரண்ட் கைதிகள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து தமிழகம் முழுவதும் தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதே போல நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக கோர்ட் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 10-க்கும் மேற்பட்ட கைதிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்து வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள 60 பேரை பிடிக்க போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டை தொடரும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
- பாராட்டுச் சான்றிதழ்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் (தெற்கு) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
இதில் கவிதைப்போட்டியில் நாமக்கல் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி ரேணுகா முதல் பரிசும், திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளி பிளஸ்-2 மாணவி நித்ய ஸ்ரீ 2-ம் பரிசும், காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவன் விஷ்வா 3-வது பரிசும் பெற்றனர்.
கட்டுரைப்போட்டியில் உடையார்பாளையம் அரசு பள்ளி பிளஸ்-2 மாணவி கார்த்திகா முதல் பரிசும், புதுச்சத்திரம் அரசு பள்ளி பிளஸ்-1 மாணவி தீபிகா 2-ம் பரிசும், நல்லூர் கிறிஸ்து அரசு பள்ளி பிளஸ்-2 மாணவி மெர்லின் லக்ஸிதா 3-வது பரிசும் பெற்றனர்.
பேச்சுப்போட்டியில் குள்ளநாயக்கன்பாளையம் அரசு பள்ளி பிளஸ்-2 மாணவி மோனிஷா முதல் பரிசும், திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளி பிளஸ்-2 மாணவி ரோஸ்லி 2-ம் பரிசும், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளி பிளஸ்-2 மாணவன் சபரிநாதன் 3-வது பரிசும் பெற்றனர்.
இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜோதி உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
- துரைசாமி (வயது 23). விவசாயி. இவருக்கும் செருக்கலை வாழைக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(37) என்பவருக்கும் தடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.
- துரைசாமிக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னங்கன்றுகளை சதீஷ்குமார் பிடுங்கி வீசியதோடு துரைசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் வலது கையை கிழித்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா செருக்கலை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் துரைசாமி (வயது 23). விவசாயி. இவருக்கும் செருக்கலை வாழைக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(37) என்பவருக்கும் தடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் துரைசாமிக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னங்கன்றுகளை சதீஷ்குமார் பிடுங்கி வீசியதோடு துரைசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் வலது கையை கிழித்துள்ளார். அதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர், துரைசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து துரைசாமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், துரைசாமி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறி, சதீஷ்குமார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் துரைசாமி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






