பரமத்திவேலூரில் வெற்றிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத் திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும் வாங்கிச் சென்றனர். வெற்றிலை வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூரில் வெற்றிலை விலை வீழ்ச்சியால்  விவசாயிகள் கவலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, செல்லப்பம்பாளையம்

உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.

வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் வெற்றிலைகளை பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டுகின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்திவேலூர் கரூர் சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலை சுமைகளை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.10 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2500-க்கும் வாங்கிச் சென்றனர்.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத் திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கும் வாங்கிச் சென்றனர்.

வெற்றிலை வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com