என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்விரோத தகராறில் மோதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு
- துரைசாமி (வயது 23). விவசாயி. இவருக்கும் செருக்கலை வாழைக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(37) என்பவருக்கும் தடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.
- துரைசாமிக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னங்கன்றுகளை சதீஷ்குமார் பிடுங்கி வீசியதோடு துரைசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் வலது கையை கிழித்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா செருக்கலை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் துரைசாமி (வயது 23). விவசாயி. இவருக்கும் செருக்கலை வாழைக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(37) என்பவருக்கும் தடம் சம்பந்தமான முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் துரைசாமிக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னங்கன்றுகளை சதீஷ்குமார் பிடுங்கி வீசியதோடு துரைசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் வலது கையை கிழித்துள்ளார். அதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர், துரைசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து துரைசாமி நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், துரைசாமி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையால் தாக்கியதாக கூறி, சதீஷ்குமார் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் துரைசாமி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






