என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District level poetry competition"

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.
    • பாராட்டுச் சான்றிதழ்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் (தெற்கு) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது.

    இதில் கவிதைப்போட்டியில் நாமக்கல் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி ரேணுகா முதல் பரிசும், திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளி பிளஸ்-2 மாணவி நித்ய ஸ்ரீ 2-ம் பரிசும், காளப்பநாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவன் விஷ்வா 3-வது பரிசும் பெற்றனர்.

    கட்டுரைப்போட்டியில் உடையார்பாளையம் அரசு பள்ளி பிளஸ்-2 மாணவி கார்த்திகா முதல் பரிசும், புதுச்சத்திரம் அரசு பள்ளி பிளஸ்-1 மாணவி தீபிகா 2-ம் பரிசும், நல்லூர் கிறிஸ்து அரசு பள்ளி பிளஸ்-2 மாணவி மெர்லின் லக்ஸிதா 3-வது பரிசும் பெற்றனர்.

    பேச்சுப்போட்டியில் குள்ளநாயக்கன்பாளையம் அரசு பள்ளி பிளஸ்-2 மாணவி மோனிஷா முதல் பரிசும், திருச்செங்கோடு அரசு மகளிர் பள்ளி பிளஸ்-2 மாணவி ரோஸ்லி 2-ம் பரிசும், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளி பிளஸ்-2 மாணவன் சபரிநாதன் 3-வது பரிசும் பெற்றனர்.

    இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜோதி உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ×