என் மலர்
நாகப்பட்டினம்
- முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
- விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு தோட்டக்கலைத்துறை வட்டார அலுவலகத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
இந்த முகாமில் முன்னோடி விவசாயி வேதையன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
துணை தோட்டக்கலை அலுவலர் செல்வராசு தோட்டக்கலை துறையினர் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இதில் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெயக்குமார், தீபா, ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விவசாயி சம்பந்தம் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் அனைவருக்கும் ஆடி பட்ட காய்கறி விதைகள் தொகுப்பு வழங்கப்பட்டது.
- கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
- படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர்.
வேதாரண்யம்:
நாகை மற்றும் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடப்பது உண்டு. இந்நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த இலங்கையை சேர்ந்த 3 பேரை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறைமுகம் கடல் பகுதியில் சுமார் 4 நாட்டிக்கல் தொலையில் ஒரு படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படை பிரிவுக்கு இன்று காலை தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒரு படகில், படகு இருக்கும் இடத்திற்கு சென்றனர். பின்னர் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த படகையும், அதில் இருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டு வேதாரண்யம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சிவகுமார் (வயது 25), ஸ்ரீகாந்த் (37), ரீகன் (45) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வந்த படகு என்ஜின் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்தாக கூறினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனா ளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்படும்.
வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
முகாமுக்கு வருபவர்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல், 2 நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இதற்கு முன் விண்ணப்பம் அளித்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.
எனவே, நாகை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விரதமிருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
- 7-ந் தேதி திரவுபதை அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை திரவுபதை அம்மன் கோவிலில் தீமிதி ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் உடையார்பாளையம் மகேந்தி ரன் பகவதர் குழுவினரால் மகாபாரத கதை நடந்தது. தொடர்ந்து, கடந்த 5ந் தேதி அரவாண் களப்பலியும், 6-ந் தேதி அர்ச்சுணன் தபசும், 7-ந் தேதி படுகள நிகழ்ச்சியும், பின், திரவுபதை அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர், மாலை திரவுபதை அம்மன் பரிவார தேவதைகளுடன் அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று, அக்னி குண்டம் முன்பு நிறுத்த ப்பட்டது.
பின், விரதமிருந்த 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனா்.
முடிவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது.
அன்னதான பணியில் கிராமமக்களும், அரசு பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டனர். இதில் வேதாரண்யேஸ்வரா் கோவில் ஆதீனவித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், கேரள செண்டை மேளமும் வாசிக்கப்பட்டது.
மேலும் சிவன், பார்வதி உள்பட பல்வேறு சுவாமி வேட மணிந்து இளைஞர்களில் வீதிஉலாவின் போது வலம் வந்தனர்.
- வாய்மேடு சமத்துவபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
- பொதுமக்களுக்கு வேஷ்டி, புடவை, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேட்டில் நாகை மாவட்ட தி.மு.க. விவசாய அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பி னருமான பழனியப்பன் தலைமை தாங்கினார்.
முன்னதாக ஆயக்கார ன்புலத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து, பின் வாய்மேடு சமத்து வபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து, வாய்மேட்டில் நடந்த நிகழ்ச்சி யில் பொது மக்களுக்கு வேஷ்டி, புடவைகள், தென்ன ங்கன்று கள் வழங்கினார்.
இதில் இந்தோனேஷியா தொழிலதிபர் திராவிட மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், ஒன்றிய துணை செயலாளர் அருள் அரசு, ஊராட்சி தலைவர் ரேவதி பாலகுரு, கிளை செயலாளர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார், சுப்ரமணியன், செந்தமிழ்ச்செல்வன், வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.
- பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் வாங்க பேசலாம் கலை இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பெருமன்றத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் புயல் குமார், மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, கிளை தலைவர் தொல்காப்பியன், செயலாளர் குழந்தைவேலு, துணை தலைவர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தேத்தாக்குடி காசிராஜன், மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு பாடல்கள் பாடினர்.
1-ம் வகுப்பு மாணவன் அருட்பிரகாஷ் திருக்குறள் பதிவு செய்தார்.
கவிஞர்கள் புவனேஸ்வரி, சவுமியா, சுதா ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.
பெண்ணிய ஓவியங்களை வரைந்த செல்வி் அமிதா, நித்தியா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
இதில் கவிஞர் வெற்றிச்செல்வன், அமைப்பின் மாவட்ட துணை தலைவர் பார்த்தசாரதி, பேராசிரியர் மாரிமுத்து, வக்கீல் வைரமணி, ஆசிரியர்கள் மோகனசுந்தரம், செந்தில்நாதன், அமிர்த லிங்கம், சத்யராஜ், சமூக ஆர்வலர் வசந்தி செல்வ குமார், நல்லாசிரியர்கள் வைரக்கண்ணு, செல்வராசு, கவிஞர்கள் கார்த்திகேயன், மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
- 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
நாகப்பட்டினம்:
திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி நாகப்பட்டினம் மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்த சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவேதனை அடைந்து வந்துள்ளனர். மனகஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளை அணுகி எந்த பலனும் அளிக்காத நிலையில் தனது தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய சரண்யா நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து சரண்யா கருவுற்று நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. முறையான உருவமே இல்லாத நிலையில் 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகை அரசு டாக்டர்கள் குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமல், மூச்சு திணறல், கிருமி தொற்று, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்த குழந்தையை தரமான சிகிச்சையால் டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.
செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு குழந்தையை மீட்ட டாக்டர்கள் பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டி பின்னர் நேரடியாக தாய் பால் கொடுக்க பயிற்சி அளித்து 540 கிராமில் பிறந்த குழந்தையை 1.5 கிலோ எடைக்கு கொண்டு வந்துள்ளனர். நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த தாய்ப்பால் வார நிறைவு விழாவில் குழந்தையை பெற்றோர்களிடம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மகிழ்ச்சியோடு ஒப்படைத்தார்.
நாகையில் 540 கிராம் எடை கொண்ட குழந்தையை போராடி காப்பாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்த நாகை அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
- சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியி ருப்பதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், திருப்புகளூர் ஊராட்சியில் கால்நடை பரா மரிப்புத்துறை, தஞ்சாவூர் ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து 2-ம் கட்ட சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வருகிற 10-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
முகாமில் கால்நடைகளுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், கன்றுகளுக்கு கன்று வீச்சு தடுப்பூசி போடுதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி போடுதல், செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுதல், ஆடுகளுக்கு துள்ளுமாரி தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடைபெற உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டு பயிற்சி, சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஆலோசனைகளும் கால்நடை வல்லுநர்கள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, படையல் இட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு, யாதவபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு 70-வது ஆண்டு கம்பசேவை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது.
முன்னதாக தெத்தேரியிலிருந்து பக்தா்கள் புனித நீராடி, கம்ப விளக்கு ஏந்தி வந்து வெங்கடாஜலபதி சன்னதியில் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து வடை மாலை, வாழைத்தார், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு படையல் இட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடா்ந்து, அரிச்சந்திரா புராண நாடகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, வருகிற 9-ந் தேதி விளக்கு பூஜை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது.
ஏற்பாடுகளை விழா நிர்வாக குழுவினரும், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் கிராமமக்களும் செய்திருந்தனா்.
- தட்டிப்பாலம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சேதமடைந்துள்ளது.
- பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்க ண்ணபுரம் ஊராட்சி வடசாரி தெருவில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாடம் தேவைகளுக்கு திருக்கண்ணபுரம் பஸ் நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், சௌரிராஜ பெருமாள் கோவில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம்,நூலகம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு சென்று வர நரிமணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தட்டிப்பாலத்தை பயன்ப டுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தட்டிப்பாலம் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சேதம் அடைந்து உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாமல் நிலை உள்ளது.
தற்போது நரிமணியாற்றில் காவிரி நீர் வந்துள்ளதால் ஆற்றைக் கடக்க முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த தட்டிப் பாலத்தை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று முதல்-அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சி யில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் தலைமையில் தலைஞாயிறு பஸ் நிலை யத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் கன கராஜ், மாவட்ட இணை செயலாளர் பாரதிராஜா, மூத்த உறுப்பினர்கள் ஞானசி காமணி, மணி மேகலை, இளைஞர் காங்கி ரஸ் கார்த்தி ஹரி உள்ளிட்ட தொண்ட ர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து கையெழு த்திட்டனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய பிரிவு பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் கூறுகையில்:-
தலைஞாயிறு பேரூராட்சி க்கு உட்பட்ட 15 வார்டுகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 3 நாட்கள் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தி சுமார் 5 ஆயிரம் பேரிடம் கையெ ழுத்து பெற்று முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
- ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மாதா மற்றும் அந்தோனியார் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேரா லயத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் அந்தோ னியாரின் பெரியதிருத்தேர் பவனி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஆலயத்தில், வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்புத்திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட சப்ப ரத்தில், மாதா மற்றும் அந்தோனியாரின் சொரூபம் தேரில் ஏற்றப்பட்டு,புனிதம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்த னர்.
இதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.






