என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் ரெயில் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு சாரா தொழிற்சங்க மாவட்ட தலைவர் அங்காடி சேகர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ.வை சேர்ந்த வசந்தி, ஏ.ஐ.டி.யூ.சி.வை சேர்ந்த மகேந்திரன், மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் சட்டங்களை முடக்க கூடாது. 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக்க கூடாது. மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. இயற்கை வளங்களை அன்னியர்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது. சமவேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் வலிவலம் கடைத்தெருவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த செல்வராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. சுமைதூக்கும் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் முனியாண்டி, சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பாக பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச.மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானத்தொழிற்சங்க மாநில செயலாளர் ஜெகமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார். இதேபோல ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன்பும் நடந்தது. திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகை அவுரி திடலில் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சரபோஜி முன்னிலை வகித்தார்.
பொது முடக்கத்தால் அவதிப்படும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 6 மாத காலத்துக்கு நிவாரணம் மற்றும் இலவச ரேசன் அரிசி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பொதுமுடக்க காலத்தை பயன்படுத்தி சம்பள வெட்டு, ஆள்குறைப்பு செய்வதை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே, நிலக்கரி சுரங்கம் பாதுகாப்புத்துறை, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
வேளாங்கண்ணி அருகே உள்ள மேலப்பிடாகை கடைத்தெருவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மாரிமுத்து, மாவட்ட துணை செயலாளர் முருகையன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் பேசினர்.
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஏற்பட்ட தீ விபத்தில் மீனவர்கள் தங்கியிருந்த 6 கூரை வீடுகள் எரிந்து நாசமாகின.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் மீன்பிடி சீசன் காலத்தில் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான படகுகளுடன் ஏராளமான மீனவர்கள் இங்கு வந்து தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்வது வழக்கம்.
இவர்கள் தங்குவதற்காகவும், சமையல் செய்து சாப்பிடுவதற்காகவும் கடற்கரை ஓரத்தில் கூரை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது மீன்பிடி சீசன் இல்லாத காரணத்தால் இங்கு தங்கி இருந்த மீனவர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த வீடுகளை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கூரை வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத்துறை அலுவலர் கந்தசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். மீனவர்கள் யாரும் அங்கு தங்கி இல்லாததால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்தில் 6 கூரை வீடுகளும் எரிந்து நாசமடைந்தன. இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதே போல் சீர்காழி அருகே விளந்திடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருஞானம்(வயது50). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் தனது கூரை வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்டு அனைவரும் வீட்டில் இருந்து வெளியே ஓடினர். தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதன் சேதமதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. தகவலறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையை சேர்ந்த டாக்டர் கொரோனாவுக்கு பலியானார். அவரது உடல் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே குத்தாலம் தாலுகா அரையபுரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன்(வயது 75). குழந்தைகள் நல மருத்துவரான இவர், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின்பு குத்தாலம் அருகே பழைய கூடலூரில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக டாக்டர் சுவாமிநாதன் குடும்பத்தினருடன் சென்னை சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் டாக்டர் சுவாமிநாதன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

பூம்புகார் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எஸ்.பவுன்ராஜ். இவர் கடந்த 30-ந் தேதி மயிலாடுதுறையில் நடந்த புதிய மாவட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.க்கள் நாகை செல்வராசு, மயிலாடுதுறை ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பவுன்ராஜ் எம்.எல்.ஏ. கொரோனா பரிசோதனைக்கு தனது ரத்த மாதிரியை கொடுத்து இருந்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பவுன்ராஜ் எம்.எல்.ஏ., சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் கடந்த 3-ந் தேதி மயிலாடுதுறையில், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே 2 எம்.பி.க்கள் மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பவுன்ராஜ் எம்.எல்.ஏ.வையும் சேர்த்து டெல்டாவில் 3 எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நாகூர் அருகே மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகூர்:
நாகையை அடுத்த நாகூர் அருகே உள்ள வெங்கடகால் கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் முருகன்(வயது 21). பட்டதாரியான இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் அவர் மாதந்தோறும் சென்னைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ்-ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் முருகனால் சென்னைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியவில்லை.
இந்த நிலையில் முருகனுக்கு மீண்டும் முதுகில் வலி ஏற்பட்டது. இதனால் அவர் தனது பெற்றோரிடம் தன்னை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டார்.
ஆனால் போதிய அளவு பண வசதி இல்லாததால் முருகனை அவரது பெற்றோரால் சென்னைக்கு அழைத்து செல்ல இயலவில்லை. இதனால் முதுகு வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட முருகன் நேற்று முன்தினம் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு செல்ல பணம் இல்லாத விரக்தியில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மணல்மேடு அருகே மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மணல்மேடு:
நாகை மாவட்டம் மணல்மேடு அருகே பொய்கைகுடி கீழத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா(வயது 40). இவர் மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு மாத விடுப்பில் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று இளையராஜா தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது அதே தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் இளையராஜாவிற்கு சொந்தமான மரத்தின் கிளைகளை வெட்டி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை இளையராஜா தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து இளையராஜாவை அரிவாளால் வெட்டியதுடன், கத்தியால் குத்தியதாகவும் தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசன்(21) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அதே தெருவை சேர்ந்த சுந்தர்ராஜன், இவருடைய மனைவி இந்திரா, மகன் ராஜேஷ், மருமகள் பார்வதி ஆகிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை:
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாகை எம்.பி., செல்வராசு மற்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் பிரவீன்நாயர் கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தை சேர்ந்த 15 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்கு உட்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தடகளம், ஆக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, இறகுபந்து, டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கு சமூக இடைவெளியுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான நுழைவு படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பயிற்சியாளர்கள் விளையாட்டரங்கில் தங்களது முழு விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தனித்தனி விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். விளையாட்டு உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. அனைவரும் முககவசத்தை கட்டாயம் அணிந்து வரவேண்டும். பயிற்சி மேற்கொள்ள வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். இதற்கென தனிக்குழு அமைத்து சோதனை மேற்கொள்ளப்படும். பயிற்சிக்கு முன்பும், பயிற்சி முடித்த பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்படுவதற்கான தடை தொடர்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேதாரண்யம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி புஷ்பவள்ளி(வயது45). இவர் அதே பகுதியில் கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தில் உள்ள தனியார் பூக்கொல்லையில் பூ பறித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது பூக்கொல்லையின் மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து புஷ்பவள்ளி மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக புஷ்பவள்ளி இறந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகை பாராளுமன்ற எம்பி செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகை:
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகை பாராளுமன்ற எம்பி செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராசு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீர்காழியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகையில் தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். அமைப்புசெயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் திரளான காவிரி விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.குறுவை, சம்பா சாகுபடி பணியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல சீர்காழியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் வைத்தீஸ்வரன்கோவில் செந்தில் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக கூட்டுறவு வங்கிகளை ரிசர்வு வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர கூடாது,
இந்த முடிவை அரசு கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தேன்கனிக்கோட்டை அருகே தக்காளி தோட்டத்தை காட்டு யானைகள் நாசப்படுத்தின. இது தொடர்பாக வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று சேதமான பயிர்களை பார்வையிட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரக்கட்டா கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் ரூ.1½ லட்சம் செலவில் தக்காளி பயிரிட்டிருந்தார்.
இவரது தோட்டத்தில் தக்காளி நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு வந்த 3 காட்டுயானைகள் பாலாஜியின் தக்காளி தோட்டத்திற்குள் புகுந்து அறுவடைக்கு தயாரான தக்காளிகளை தின்றும்,
கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.
நேற்று காலையில் தோட்டத்திற்கு வந்த பாலாஜி, சேதமான தக்காளி பயிர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து தேன்கனிகோட் டை வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் பாலாஜியின் தோட்டத்திற்கு சென்று சேதமான பயிர்களை பார்வையிட்டனர்.
மேலும் அவருக்கு வனத்துறையினர் ஆறுதல்கூறினர்.