என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    சீர்காழியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகையில் தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். அமைப்புசெயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். இதில் திரளான காவிரி விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.குறுவை, சம்பா சாகுபடி பணியில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

    கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதை மத்திய அரசு கைவிட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதேபோல சீர்காழியில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் வைத்தீஸ்வரன்கோவில் செந்தில் முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக கூட்டுறவு வங்கிகளை ரிசர்வு வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர கூடாது,

    இந்த முடிவை அரசு கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    Next Story
    ×