என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழியில் அடகு கடை உரிமையாளரை அரிவாளை காட்டி மிரட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் ராஜேந்திரன் (வயது 55). இவர், அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று மதியம் குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி (40) என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்த 5 பவுன் நகையை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் அந்த நகை மூழ்கி விட்டதாக தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கந்தசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி ராஜேந்திரனை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறையின் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். நீதிபதிகள் முருகேசன், சித்திக் ஆகியோர் குழு அறிக்கைகளை பேச்சுவார்த்தை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும்.கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை ஒரே அரசாணையில் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த முத்துலெட்சுமி (வயது42), காக்கழனி காலனி தெருவை சேர்ந்த சாந்தி (43), ராதாமங்கலம் எறும்புகன்னி பகுதியை சேர்ந்த முருகையன் மகன் தமிழ்குடிமகன் (28) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சீர்காழி அருகே மகன் இறந்த துக்கத்தில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியை அடுத்த எடமணல் ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 27). இவர், கடந்த 10-ந் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரில் கொலை செய்யப்பட்டார்.
மகன் இறந்ததில் இருந்து சேகர் அவரது நினைவாகவே இருந்தார். சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் இருந்து மீள முடியமல் தவித்து வந்தனர்.
இறந்துபோன சந்தோஷ் நினைவாக நேற்று அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் சேகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்த சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். அடுத்தடுத்து மகனையும், கணவரையும் இழந்த தமிழரசி மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்.
மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியை அடுத்த எடமணல் ஊராட்சிக்குட்பட்ட சஞ்சீவிராயன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சேகர். விவசாயியான இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 27). இவர், கடந்த 10-ந் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி எதிரில் கொலை செய்யப்பட்டார்.
மகன் இறந்ததில் இருந்து சேகர் அவரது நினைவாகவே இருந்தார். சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சோகத்தில் இருந்து மீள முடியமல் தவித்து வந்தனர்.
இறந்துபோன சந்தோஷ் நினைவாக நேற்று அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் சேகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்த சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட சேகருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். அடுத்தடுத்து மகனையும், கணவரையும் இழந்த தமிழரசி மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்.
குத்தாலம் அருகே தூங்கிய பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த சேத்திரபாலபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் இளவரசன். கார் டிரைவரான இவருக்கும், மல்லியம் பகுதியை சேர்ந்த அகிலா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் இவர்களுக்கு யஷ்வந்த் என்ற 6 மாத கைக்குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி இரவு குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கு குழந்தையை பார்த்தபோது எந்தவித அசைவும் இன்றி இருந்ததால், சந்தேகம் அடைந்த கணவனும், மனைவியும் சேர்ந்து குழந்தையை தூக்கி கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனிடையே அகிலா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து குத்தாலம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த சேத்திரபாலபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் இளவரசன். கார் டிரைவரான இவருக்கும், மல்லியம் பகுதியை சேர்ந்த அகிலா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் இவர்களுக்கு யஷ்வந்த் என்ற 6 மாத கைக்குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி இரவு குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கு குழந்தையை பார்த்தபோது எந்தவித அசைவும் இன்றி இருந்ததால், சந்தேகம் அடைந்த கணவனும், மனைவியும் சேர்ந்து குழந்தையை தூக்கி கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனிடையே அகிலா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து குத்தாலம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராசு மற்றும் போலீசார், வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய விராலி மஞ்சள் 25 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சள் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் முனீஸ்வரன்(வயது 38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராசு மற்றும் போலீசார், வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தில் ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய விராலி மஞ்சள் 25 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மஞ்சள் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் முனீஸ்வரன்(வயது 38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
நாகை அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பசுபதி (வயது 60) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர்.
நாகூரில் சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தல்படி, சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நாகூரை அடுத்த கொட்டராக்குடியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கொட்டராக்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 22), நாகை பெரிய சன்னமங்களம் பகுதியை சேர்ந்த வீரமணி (65) ஆகியோர் என்பதும், சாராயம் கடத்தி வந்து விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், வீரமணி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 220 லிட்டர் பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் ரவி (44) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செல்லப்பன் ரவியை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
நாகை காப்பகத்தில் இருந்து மகனுடன் பெண் மாயமானார். இது குறித்து காப்பக மேலாளர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
நாகை சாமந்தன்பேட்டை பகுதியில் பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. நாகை மாவட்ட சமூகநலத்துறை பரிந்துரைப்படி விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் எட்டுக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஸ்வரி (வயது 37), அவரது மகன் சிவராமன் (4) ஆகியோர் கடந்த 2 மாதங்களாக இங்கு தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காப்பக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது மகேஸ்வரி தனது மகனுடன் காப்பகத்தில் இருந்து திடீரென மாயமானார்.
இதுகுறித்து காப்பக மேலாளர் அமிர்தவள்ளி கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுமனை வாரியத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை-நாகூர் சாலையில் சந்திரா கார்டன் உள்ளது. இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், தலைவர் ஸ்ரீதர், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் திருவருட்செல்வம் ஆகியோர் தலைமையில் நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
ரியல் எஸ்டேட் தொழில் கடந்த 30 ஆண்டு காலங்களில் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. வீட்டுமனை விற்பனை செய்பவர்கள் மனையை வாங்க வருவோர்களிடம் அனைத்து வசதிகளும் இருப்பதாக கூறி விற்பனை செய்து விடுவார்கள். ஆனால் மனையை பெற்ற பின்னர் உரிமையாளர் படும் கஷ்டத்தை வெளியில் சொல்லமுடியாது.
இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க வெளிநாடுகளில் உள்ளது போல் வீட்டுமனைகளை அரசே பொறுப்பேற்று விற்பனை செய்ய வேண்டும். வீட்டுவசதி வாரியம் உள்ளது போல் வீட்டுமனை வாரியத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அப்போது தான் அரசுக்கு சொந்தமான மனைகளை தனிநபர் விற்பனை செய்யமுடியாது என கூறினார். தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் பெயர் பலகையை திறந்து வைத்தார். மேலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 333 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை மகாலட்சுமி நகரில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு மகாலட்சுமிநகர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 333 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 11 லட்சத்து 81 ஆயிரத்து 140 மதிப்பிலான வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக அரசு சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீனவ சமுதாய மக்களின் மேல் முழுமையான அக்கறை கொண்டு, அவர்களது வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்யவும் தீவிரமாக முயற்சித்து வருகிறது. சுனாமி பட்டாவானது, பெண்களின் கைகளில் வழங்கப்படுகிறது. ஏனென்றால் அவர்கள்தான், குடும்பத்தின் சொத்தை அழியாமல் பாதுகாக்கும் திறமையுடையவர்களாக இருக்கிறார்கள்.
நாகை மாவட்டம் இயற்கை இடர்பாட்டால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மாவட்டமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடலோர பகுதியில் உள்ள மீனவ மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்திலுள்ள பல மீனவ கிராமங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்றைய தினம் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களில் நாகை மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த 333 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 11 லட்சத்து 81 ஆயிரத்து 140 மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலனுக்காகவும், மீனவர்களின் நலனுக்காகவும் தமிழக அரசு தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நாகை எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் தங்க.கதிரவன், திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிவா, வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார், நகராட்சி ஆணையர் ஏகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் மற்றும் விழுந்தமாவடியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வேதையன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மீனா, மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு அந்தப்பகுதிகளில் கொடியேற்றி வைத்து பேசினார். முன்னதாக 500-க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் தங்களை இணைந்து கொண்டனர். இதில் முன்னாள் கீழவேளூர் தொகுதி செயலாளர் பால்ராஜ், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சதீஸ், சிறுபாண்மை பிரிவு ஒன்றிய தலைவர் சுல்தான் ஆரிபு மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருமண மண்டபம் ரூ. 10 லட்சத்தில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த திருமண மண்டபத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு இணை ஆணையர் தென்னரசு, ஆய்வாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக செயல் அலுவலர் கணேஷ்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கிரிதரன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமையன், தேவி செந்தில், ஒன்றியக்கவுன்சிலர் மாலதி துரைராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவில் எழுத்தர் அன்புகார்த்தி நன்றி கூறினார்.
வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.100 கோடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகளை கலெக்டர் பிரவீன்நாயர் ஆய்வு செய்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மீன்பிடித்தொழிலில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் நாகப்பட்டினம் மாவட்டமும் ஒன்றாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முக்கிய தொழிலாக இருப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் அதிக வருவாயும் தருகிறது. நுகர்வோருக்கு சிறந்த உணவு பொருளாக இருப்பதுடன் இதனை சேர்ந்த பல உபதொழில்கள் உருவாகவும் இந்த மீன்பிடி தொழில் மிக முக்கிய காரணியாக திகழ்கிறது.
வெள்ளப்பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் 9,176 பேர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மீனவர்களுக்கு சொந்தமாக 490 நாரிழை படகுகள் மற்றும் 80 கட்டுமரங்கள் ஆகியவை மீன்பிடி தொழிலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்களை இறக்கி சுகாதாரமான முறையில் சந்தைப்படுத்துவதற்கும், வலைகளை பின்னுவதற்கும் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது,
இப்பகுதி மீனவ மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த மீன்பிடி துறைமுகத்தில் தெற்குபுறத்தில் 1300 மீட்டர் நீளத்திற்கும், வடக்குப்புறத்தில் 1080 மீட்டர் நீளத்திற்கும் அலைத்தடுப்பு சுவரும், 240 மீட்டர் நீளமுள்ள படகு அணையும், 2 மீன் ஏலக்கூடங்களும், 2 வலை பின்னும் கூடங்களும், 1 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 1 அலுவலக கட்டிடம் மற்றும் தகவல் தொடர்பு கோபுரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைய உள்ளது.
இந்த புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று, பயன்பாட்டுக்கு வரும் போது, இப்பகுதியை சுற்றியுள்ள காமேஸ்வரம், விழுந்தமாவடி, வானவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, புஷ்பவனம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது உதவி கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, செயற்பொறியாளர்(மீன்வளத்துறை) முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், வேதாரண்யம் தாசில்தார் முருகு உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






