search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிமுன் அன்சாரி
    X
    தமிமுன் அன்சாரி

    வீட்டுமனை வாரியத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்- தமிமுன் அன்சாரி கோரிக்கை

    வீட்டுமனை வாரியத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை-நாகூர் சாலையில் சந்திரா கார்டன் உள்ளது. இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள், தலைவர் ஸ்ரீதர், செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் திருவருட்செல்வம் ஆகியோர் தலைமையில் நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,

    ரியல் எஸ்டேட் தொழில் கடந்த 30 ஆண்டு காலங்களில் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. வீட்டுமனை விற்பனை செய்பவர்கள் மனையை வாங்க வருவோர்களிடம் அனைத்து வசதிகளும் இருப்பதாக கூறி விற்பனை செய்து விடுவார்கள். ஆனால் மனையை பெற்ற பின்னர் உரிமையாளர் படும் கஷ்டத்தை வெளியில் சொல்லமுடியாது. 

    இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க வெளிநாடுகளில் உள்ளது போல் வீட்டுமனைகளை அரசே பொறுப்பேற்று விற்பனை செய்ய வேண்டும். வீட்டுவசதி வாரியம் உள்ளது போல் வீட்டுமனை வாரியத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அப்போது தான் அரசுக்கு சொந்தமான மனைகளை தனிநபர் விற்பனை செய்யமுடியாது என கூறினார். தொடர்ந்து குடியிருப்பு வளாகத்தில் பெயர் பலகையை திறந்து வைத்தார். மேலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×