என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை உயிரிழப்பு
    X
    குழந்தை உயிரிழப்பு

    குத்தாலம் அருகே தூங்கிய பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

    குத்தாலம் அருகே தூங்கிய பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த சேத்திரபாலபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் இளவரசன். கார் டிரைவரான இவருக்கும், மல்லியம் பகுதியை சேர்ந்த அகிலா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் இவர்களுக்கு யஷ்வந்த் என்ற 6 மாத கைக்குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி இரவு குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கு குழந்தையை பார்த்தபோது எந்தவித அசைவும் இன்றி இருந்ததால், சந்தேகம் அடைந்த கணவனும், மனைவியும் சேர்ந்து குழந்தையை தூக்கி கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதனிடையே அகிலா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து குத்தாலம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×