என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கில் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் 2 கார்களையும் சோதனையிட்டனர்.
அப்போது கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 கார்களில் இருந்த 7 பேரையும் போலீசார் கைது செய்து வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் 7 பேரும் வேதராண்யம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கஞ்சாவை பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வந்து நள்ளிரவில் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள 147 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது. மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கீட்டமைன் என்ற போதை பொருளும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா மூட்டைகள் மற்றும் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு 7 பேரிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
7 பேரும் எங்கிருந்து கஞ்சா மற்றும் போதை பொருளை எடுத்து வந்தனர். இதில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். பா.ஜனதா கட்சியினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப் படக்கூடிய அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் என திட்டமிடுகின்றனர். பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களை கவர்னராக நியமித்து வருகின்றனர்.
அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு முயல்கிறது. அந்த அடிப்படையில்தான் எச்.ராஜாவை கேரள கவர்னராக நியமிக்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு இந்திய அரசு ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை உதவி செய்துள்ளது. அந்த உதவி இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையாக கிடைப்பதை இந்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இலங்கையில் தவிக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... ராஞ்சி பெண்ணிடம் நூதன மோசடி- ரூ.25 லட்சம் லாட்டரியில் வென்றதாக கூறி ரூ.3.45 லட்சம் அபேஸ்






