என் மலர்

  நீங்கள் தேடியது "stairs"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர்.
  • படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர்

  அனுப்பர்பாளையம் :

  திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் திருமுருகன்பூண்டி பஸ் நிறுத்தத்திற்கு காலை 8 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர். முன்புறத்தில் படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது முன்புறம்,பின்பக்கத்திலும் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். மேலும் படிக்கட்டில் நின்று சத்தம் போட்டும் கிண்டல் அடித்தும் வந்துள்ளனர். இதனால் பெண்களும் பயணிகளும் முகம் சுழித்தனர்.

  பஸ் கண்டக்டர் மாணவர்களிடம் பஸ்சிற்குள் வரச்சொல்லி வலியுறுத்தினார். ஆனால், மாணவர்கள் கேட்காமல் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் நின்றுகொண்டு கைகளை வெளியே வீசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை பூண்டி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்து பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு வந்தால் நான் பஸ்சை எடுக்கமாட்டேன் என்று உறுதிபடகூறி கீழேயே நின்று கொண்டார். மாணவர்களின் இந்த செயல் பயணிகள் -பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இது போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ElectricTrain #Ticket #MonthlyPass
  சென்னை:

  கடந்த 24-ந் தேதி காலை மின்சார ரெயிலில் படிக்கட்டு அருகே தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்த சுவரில் மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து நடந்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 25-ந் தேதி தலைமை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் ஆய்வு மேற்கொண்டார்.  விபத்து குறித்து நேற்று ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் ரெயில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 12 ரெயில் பயணிகள் தங்கள் கருத்துகளையும், விபத்து குறித்தும் தெரிவித்தனர். 22 ரெயில்வே ஊழியர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

  இதுபோன்ற ரெயில் விபத்துகளை தடுப்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் லூயிஸ் அமுதன் கூறியதாவது:-

  ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் நடத்தியுள்ளோம். படியில் தொங்கியபடி பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் மாதாந்திர பயணச்சீட்டு(பாஸ்) பறிமுதல் செய்யப்பட்டு, அதை நிரந்தரமாக ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். #ElectricTrain #Ticket #MonthlyPass 
  ×