என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராய விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
நாகை புதிய பஸ் நிலையத்தில் கள்ளச்-சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டுப்புற கலை மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள்,
கரகாட்டம் மற்றும் நாடகங்கள் நடைபெற்றது. முன்னதாக டி.எஸ்.பி ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் கள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம்
வழங்கினார். அதனை தொடர்ந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய கரகாட்டம், தப்பாட்டம் கிராமிய பாடல்கள் இடம்பெற்றன.
தொடர்ந்து மது பழக்கத்தினால் சமுதாயத்தில் மரியாதை குறைவு. உறவுகள் இடையே விரிசல். அதிகரிக்கும் கடன் தொல்லை. நினைவாற்றல் இழக்கும் சூழ்நிலை. தவறுகள் செய்ய தூண்டும்.
எனவே மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்று நாடகம் மூலம் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பஸ் நிலையத்தில் இருந்த ஏராளமான பொதுமக்கள்
கண்டு-களித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்துவது, வைத்திருப்பது, விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டவருக்கும், கள்ளச்சாராய
விற்பனையினை விட்டு மறுவாழ்வு பெறுவதற்கும் உதவி செய்யப்படும்.நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை 04365-247430 அல்லது கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 10581 ஆகிய
எண்களில் தெரிவிக்-கலாம். தகவல் தெரிவிப்போர் ரகசியம் பாதுகாக்-கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






