என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம்
மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு
நாகை ஆழியூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் நாகை ஒன்றியம் மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை சார்பாக, ஆழியூர் ஊராட்சி மற்றும் தேமங்கலம் ஊராட்சி பகுதியில் வசிக்கக்கூடிய மாற்றுத் திறனாளிக்கான நல உதவித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஆழியூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியில், நடைபெற்றது.
இதில், தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வட்டார அணி தலைவர் ரவிச்சந்திரன் மாற்றுத்திற னாளிகளுக்கு மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினார். சொந்த தொழில் தொடங்கிடவும் ஏற்கெனவே செய்துவரும் தொழிலை விரிவுபடுத்திடவும் ஊராட்சி குழு அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக கடனுதவி பெறும் திட்டம். தொழில் குழு திட்டம் 10 பேர் முதல் 30 பேர் வரை ஒன்றிணைந்து துவக்க நிதி பெற்று தொழில் குழு செய்ய கடனுதவி திட்டம்.
உற்பத்தியாளர்கள் குழு திட்டம் 30 முதல் 150 பேர் வரை ஒன்றிணைந்து உற்பத்தியாளர்கள் குழு தொழில் தொடங்க கடனுதவி திட்டம் சுயதொழில் பயிற்சி கம்ப்யூட்டர் சாம்பிராணி, மெழுகு வர்த்தி, அழகு நிலையம் போன்ற பல்வேறு தொழில்கள் கற்றுக் கொள்ள இலவச பயிற்சி திட்டம் பல்வேறு தகவல்களை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளின் முழு விபரங்களுடன், தனிநபர் பயிற்சி தேவையா எந்தவிதமான பயிற்சி வேண்டும் மாதஉதவித்தொகை பெறுகிறாரா. தனிநபர் (அல்லது) குழுவின் வாயிலாக வங்கி கடன் பெற்றவரா உபகரணங்கள் தேவையா வேறு உதவிகள் இருப்பினும் அதுபற்றிய முழு விபரங்களையும் விண்ணப்பங்களாக பெறப்பட்டது.
மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சம்பத்குமார் மாற்று திறனாளிகளுக்கு உதவியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்தும், சரி பார்த்தும் உதவினார். பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாழ்ந்து காட்டுவோம் அலுவலகத்தின் வாயிலாக, மாவட்ட கலெக்டர் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
முன்னதாக, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் பிரதிநிதி கலையரசன் வரவேற்றார். மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நாகப்பட்டினம் ஒன்றியத்தின் நிர்வாகியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்க செயலாளருமான ஹாஜா நன்றி கூறினார்.
ஆழியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானப்பிரகாசம், ஆர்த்தி, மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை நிறுவன தலைவர் சம்பத்குமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பொருள்வை கண்ணுவாப்பா, ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி, அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் கணேஷ், ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட தேமங்கலம் ஊராட்சி ஆழியூர் ஊராட்சியை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும், குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
Next Story






