என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    தேவூர் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே தேவூரில் உள்ள ஸ்ரீ செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. 

    அப்போது மாரியம்மன் மணிமண்ட-பத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்பு கட்டி கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 

    அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ செல்லமுத்து மாரியம்-மனுக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

    இத்தலத்தில் செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 2-வது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் வழிபாடு தடைபட்ட நிலையில் இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வந்துள்ளனர். இதற்காக நகரத்தார் மக்கள் சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்பட்டு இரண்டாவது செவ்வாய் கிழமையான இன்று காலை இங்கு வந்து சேர்ந்தனர்.

    குலதெய்வ வழிபாடாகவும் அதே சமயம் தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை பொருட்களை 51 கூண்டு வண்டிகளில் ஏற்றி பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இந்த ஆண்டு பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தாங்கள் வேண்டுதலுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய கம்புகளை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக் மேற்பார்வையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபட்டது.

    வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேரூராட்சித் தலைவர் பூங்கொடி செயல் அலுவலர் மருதுபாண்டியன் உத்தரவின்படி குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
    கருப்பம்புலத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முதல்வர் அனுப்பிய வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராம் தலைமை வகித்தார். 

    கூட்டத்தில் தமிழக முதல்வர் அனுப்பி வாழ்த்து வாசிக்கப்பட்டது.
    அதில் 75-ம் ஆண்டை அமுத பெருவிழாவாக கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் 9 இனங்களான வறுமை ஒழிப்பு, ஆரோக்கியமான வாழ்வு, குழந்தை நிலையம், குடிநீர் வசதி, சமூக பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் அடிப்படை வசதிகள், பசுமையும் தூய்மையும் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றை ஊராட்சி அடைய வேண்டுகிறேன் என தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    பின்பு பசுமை கிராமம் தூய்மை கிராமம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கிராம சபா கூட்டத்தில் நாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் பெரிய அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை நகர பகுதியில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் பெரிய அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. 

    நாகை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக அர்ஜூன் சம்பத் பிறந்தநாள் விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலுக்கு அருகில் பக்தர்களுக்கு தர்பூசணி பழம், நீர்மோர், பானகம் மற்றும் முக கவசம் ஆகியவை வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட தலைவர் ஜெய விஜயேந்திர சுவாமி தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நாகை நகர தலைவர் பிரதீப் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    கஞ்சா கடத்தல் கும்பலுடன் பிரியாணி சாப்பிட்ட நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி உத்தரவிட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தும் குற்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சா பொட்-டலங்கள், விசைப்படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருப்பதாக நாகை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு நாகை துறைமுகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட எஸ்.ஐ பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரூ.4 கோடி மதிப்புள்ள 400 கிலோ 
    கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 

    மேலும், கடத்தலில் தொடர்புடைய அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மோகன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலம்பரசன், நிவாஸ், கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஜெகதீசன், பாப்பாகோவில் பகுதியைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் 
    கைது செய்தனர்.

    இந்நிலையில் சிறையில் இருக்கும் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் கும்பலின் தலைவனான சிலம்பரசன் வீட்டில் நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சிலம்பரசன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது குறித்த சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் மற்றும் அவருடைய நண்பர்களோடு போலீஸ் சீருடையுடன் நாகை நகர இன்ஸ்பெக்டர் பெரியசாமி பிரியாணி விருந்தில் பங்கேற்று உள்ளார்.  

    கஞ்சா குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய இன்ஸ்பெக்டர் கடத்தல் குற்றவாளிகளோடு சொகுசு ஓட்டலில் பிரியாணி சாப்பிடும் படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல கஞ்சா கடத்தல் கும்பலோடு சீருடையுடன் பிரியாணி சாப்பிட்ட இன்ஸ்பெக்டர் பெரியசாமியை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
    நாகை புது கடற்கரையில் திருத்துறைப்பூண்டி நாட்டியாஞ்சலி குழு நடன கலைஞர்களை ஒருங்கிணைத்து நாகை சங்கமம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருத்துறைப்பூண்டி:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டரால் நடத்தப்படும் நாகை சங்கமம் என்ற நடன நிகழ்ச்சியை திருத்துறைப்பூண்டி நாட்டியாஞ்சலி குழு நடன கலைஞர்களை ஒருங்கிணைத்து அரசு விழாவாக நாகை புது கடற்கரையில் நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் நடன-மாடிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார். நாட்டியாஞ்சலி குழு செயலாளர் மருத்துவர் தா.ராஜா, அமைப்பாளர் எடையூர் மணிமாறன், துணைச் செயலாளர் முனைவர் நா.துரைராயப்பன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் துணை அமைப்பாளர் பசுபதி ஆகியோர் நாட்டியாஞ்சலி குழு சார்பாக கலந்து கொண்டு விழாவை ஒருங்கிணைத்தனர்.

    விழாவில் சிறப்பாக நடனம் ஆடிய தொல்காப்பியா மணிமாறனை கலெக்டர் பாராட்டினார். 

    இதில் 150-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குகொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்தினர்.  விழாவில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையால் பரிசு பெற்றவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. 

    சிம்காஸ் அமைப்பின் சார்பாக பனை கிழங்கால் செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
    ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிலக்கரி தட்டுப்பாடு, மின்தடை ஏற்பட காரணம் மத்திய பா.ஜனதா அரசுதான் என நாகையில் துரை.வைகோ பேட்டியளித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த புத்தூரில் ம.தி.மு.க செயல்-வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் நகர செயலாளர் ராஜேந்திர சோழன் முன்னிலையிலும் நடைபெற்றது.
    கூட்டத்தில் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறியதாவது:

    தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மின்தடை இருப்பதற்கு காரணம் நிலக்கரி தட்டுப்பாடு, நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படு-வதற்கு காரணம் மத்திய பாஜக அரசுதான்.
     
    நிலக்கரி இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு தடைகளை போட்டது, அதுவே தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணம். பருவமழை பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்ட நெற்பயிர் பாதிப்புகளுக்கு இதுவரை ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஒன்றிய குழு தமிழகத்தில் வந்து ஆய்வு செய்து சென்று 6 மாதங்கள் ஆகிய நிலையிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்ட 7400 கோடி நிவாரண தொகையை இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
     
    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா-மலை ஒரு படித்த இளைஞர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. ஆனால் அவரு-டைய தொலைக்காட்சி பேட்டிகள் அதிர்ச்சி அளிக்கிறது. மின்தடை தொடர்பாக அண்ணாமலை கொடுத்த விளக்கங்கள் அனைத்தும் பொய். பொய்-யான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அண்ணாமலை கூறி வருகிறார்.

    பா.ஜனதா போன்ற வலதுசாரி அமைப்புகளின் மூலதனமே பொய்தான். பொய்யான தகவல்களை பரப்பி மக்களை மொழியால், இனத்தால் பிரித்து வருகின்றனர்.
     
    சமூக வலைத்தளங்களில் கற்பனைக்கு எட்டாத வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தவறான பிரச்சாரத்தில் பா.ஜனதா ஈடுபடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    எரவாஞ்சேரியில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் காரைக்கால் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, கும்பகோணம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு இணைந்து பொதுநல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் அனுராக் தலைமை தாங்கினார். மேலாளர்கள் மாறன், ரவிக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் வரவேற்றார். முகாமில் பொது மருத்துவம், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி, கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    முகாமில் மருந்து மாத்திரைகள், தேவைப்படுபவர்களுக்கு மூக்குக்கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர். 

    இதில் முதியோர் அமைப்பு இயக்குனர் இளங்கோ, சி.எஸ்.ஆர் மேலாளர் விஜயகண்ணன், துணைத்தலைவர் சுபைதா ராஜேஷ், ஊராட்சி செயலாளர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நரிமணத்தில் பழுதடைந்த தொகுப்பு வீட்டை இடித்தபோது காரைகள் பெயர்ந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணம் ஊராட்சி கீழத்தெருவைச் சேர்ந்த தனபதி என்பவருக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடு ஒன்று உள்ளது. வீடு மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் சுமார் 4 ஆண்டுகளாக அந்த வீட்டினை பூட்டி விட்டு அருகாமையில் தகர செட் அமைத்து அதில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் தனக்கு சொந்தமான பழுதடைந்த தொகுப்பு வீட்டை பணியாளர்கள் கொண்டு இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நரிமணம் கீழத் தெருவை சேர்ந்த அழகு மூர்த்தி, அய்யாக்கண்ணு மற்றும் உத்தமசோழபுரத்தை சேர்ந்த சிங்காரவேல் ஆகிய மூவரும் வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்புற காரை பெயர்ந்து விழுந்தது. இதில் இடர்பாடுகளில் மூவரும் சிக்கினர். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாகை மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    அதனடிப்படையில் கீழ்வேளூர் கீழத்தெரு இரட்டை மதகடி முகமது ரபிக் (62), மற்றும் சிக்கவலம் மெயின் ரோடு வெங்கடேஷ் என்கிற வெங்கடாஜலபதி (35) ஆகிய இருவர் மீதும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளது.

    இதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பரிந்துரையின்படி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தவின்படி 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    வேதாரண்யத்தில் மீன்பிடி தடைகாலத்தால் மீன்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. 
    இந்நிலையில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்-களில் இருந்து நாள்தோறும் குறைந்த அளவிலான பைபர் படகுகள் 5 கடல்மைல் தொலைவில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    நாள்தோறும் மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடிக்க சென்று காலையில் கரை வந்து சேருகின்றனர். மீனவர்களின் வலையில் வாவல், காலா, பண்ணா, கானாங்-கெளுத்தி, மத்தி மீன்கள், நண்டு இறால் குறைந்த அளவில் கிடைக்கின்றன. 

    மீன்பிடி தடைக்காலம் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லாத நிலையில் பைபர் படகுகள் மூலம் குறைந்த தூரம் சென்று மீன் பிடித்து வரும் மீன்கள் நல்ல விலைக்கு போகின்றன.

    தற்போது வாவல் மீன் கிலோ 800 ரூபாய்க்கும், காலா மீன் 600 ரூபாய்க்கும், இறால் 400-க்கும், நீலக்கால் நண்டு 700-க்கும், மத்திமீன் 70 ரூபாயக்கும் விற்பனை ஆகிறது.
     
    தற்போது அனைத்து வகைமீன்களும் 100 முதல் 200 வரைவிலை உயர்ந்-துள்ளது.  குறைந்த அளவு மீன்கள் கிடைத்ததாலும் நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் மீன் விலை உயர்வால் மீன் பிரியர்கள் குறைந்த அளவே மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன்கள் அதிகம் வரததால் கோழி, ஆட்டு கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    இன்னும் ஒரு வார காலத்தில் இப்பகுதியில் ஏரி குளம், குட்ட களில் நாட்டு மீன்கள் பிடிக்க துவங்குவர்கள் அப்பொழுது விரல், கெண்டை சிலேபி நறுவை மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் விலையும் குறையும் என மீன் பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
    திட்டச்சேரி-திருமருகல் இடையே சாலை சீரமைப்பு பணிகள் உடன் முடிக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் நாகை&நன்னிலம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக அன்றாடம் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 

    மிகவும் போக்குவரத்து அதிகம் உள்ள முக்கியமான இந்த சாலை திட்டச்சேரியில் இருந்து திருமருகல் வரை சேதமடைந்து இருந்தது.

    இச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திட்டச்சேரியில் 5 இடங்களில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யப்பட்டது. 

    இன்றுவரை ஜல்லி கற்கள் மேல் தார்சாலை அமைக்கப்-படாமல் அப்படியே உள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படு-கின்றனர். மேலும் இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெயர்ந்து கிடைக்கும் ஜல்லி கற்கள் தெரியாமல் இடறி கீழே விழுந்து விபத்துக்-குள்ளாகின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

    எனவே திட்டச்சேரி-திருமருகல் இடையே கிடப்பில் போடப்பட்டுள்ள சீரமைக்கும் பணியினை உடன் முடிக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×