என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகை சங்கமம் நடன நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் நாட்டியாஞ்சலி குழுவினர் கலந்து கொண்டனர்.
நாகை சங்கமம் நடன நிகழ்ச்சி
நாகை புது கடற்கரையில் திருத்துறைப்பூண்டி நாட்டியாஞ்சலி குழு நடன கலைஞர்களை ஒருங்கிணைத்து நாகை சங்கமம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டரால் நடத்தப்படும் நாகை சங்கமம் என்ற நடன நிகழ்ச்சியை திருத்துறைப்பூண்டி நாட்டியாஞ்சலி குழு நடன கலைஞர்களை ஒருங்கிணைத்து அரசு விழாவாக நாகை புது கடற்கரையில் நடைபெற்றது.
விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் நடன-மாடிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார். நாட்டியாஞ்சலி குழு செயலாளர் மருத்துவர் தா.ராஜா, அமைப்பாளர் எடையூர் மணிமாறன், துணைச் செயலாளர் முனைவர் நா.துரைராயப்பன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் துணை அமைப்பாளர் பசுபதி ஆகியோர் நாட்டியாஞ்சலி குழு சார்பாக கலந்து கொண்டு விழாவை ஒருங்கிணைத்தனர்.
விழாவில் சிறப்பாக நடனம் ஆடிய தொல்காப்பியா மணிமாறனை கலெக்டர் பாராட்டினார்.
இதில் 150-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்குகொண்டு தன் திறமைகளை வெளிப்படுத்தினர். விழாவில் நாகை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையால் பரிசு பெற்றவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
சிம்காஸ் அமைப்பின் சார்பாக பனை கிழங்கால் செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
Next Story






