search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுப்பு வீடு"

    • மழை நேரத்தில் தண்ணீர் கசியாமல் தவிர்க்க தார்ப்பாய் கொண்டு மேற்கூரைகளை முடியும், அருகில் கீற்று கொட்டகைகளை கட்டியும் பொதுமக்கள் அதில் வசித்து வருகின்றனர்.
    • பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதினோராயிரம் வீடுகள் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்பட உள்ளன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 வருடங்கள் பழமை வாய்ந்த சுமார் 30,000 தொகுப்பு வீடுகள் இடிந்து விடும் நிலையில் உள்ளது. பல்வேறு பகுதிகள் மிகவும் ஏழ்மையான மக்கள் வசிக்கும் காலணி பகுதிகளாக உள்ளன. மேற்கூரைகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

    பலத்த மழை பெய்யும் போது இந்த வீடுகளில் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்து வசிக்கும் மக்கள் மீது காயங்கள் ஏற்படுகின்றன. மழை நேரத்தில் தண்ணீர் கசியாமல் தவிர்க்க தார்ப்பாய் கொண்டு மேற்கூரைகளை முடியும், அருகில் கீற்று கொட்டகைகளை கட்டியும் பொதுமக்கள் அதில் வசித்து வருகின்றனர்.

    கன மழை பெய்யும் பொழுது உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடனே பொதுமக்கள் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். சில நேரங்களில் உறவினர் வீடுகள், கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றில் தங்கி வருகின்றனர்.

    கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் கன்னித்தோப்பு தெரு என்ற இடத்தில் சுப்பையன் என்ற முதியவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    மழைச்சாரல் ஏற்பட்டதால் வீட்டுக்கு பின்புறம் உள்ள கொட்டகையில் அவர் படுத்து இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக
    உயிர்த்தப்பினார்.

    மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பின்படி 30 ஆயிரம் வீடுகள் இவ்வாறு இடிந்த நிலையில் உள்ளதாக தெரிகிறது.பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதினோராயிரம் வீடுகள் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்பட உள்ளன.

    உடனடியாக முன்னுரிமை அடிப்ப டையில் புதிய வீடுகள் கட்டும் முன்பு பழுதடைந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடு கட்டி தரவேண்டும்.

    பெரும் விபத்து ஏற்படும் முன் தமிழக அரசு வீடுகளை கட்டித்தந்து பொதுமக்கள் உயிரை காப்பாற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வீட்டின் உள்ளே இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலையில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • அன்பழகிக்கு கையில் பலத்த காயம் மற்றும் அவரது மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் மேலத் தெருவில் வசித்து வருபவர் அன்பழகி(வயது48). இவர் கணவனை இழந்து தனது மாற்றுத்திறனாளி பெண் விஜயகுமாரியுடன் வசித்து வருகிறார் .இவர்கள் 1990-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் உள்ளே இருவரும் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

    இதில் அன்பழகிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டு தாய், மகள் இருவரையும் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், வருவாய் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீடு சேதமடைந்த நிலையில் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது.இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளதாக அங்கு வசிப்பவர்கள் கூறினர். எனவே அரசு சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×