என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நிலக்கரி தட்டுப்பாடு, மின்தடை ஏற்பட காரணம் மத்திய பா.ஜனதா அரசுதான் - துரை.வைகோ

    ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிலக்கரி தட்டுப்பாடு, மின்தடை ஏற்பட காரணம் மத்திய பா.ஜனதா அரசுதான் என நாகையில் துரை.வைகோ பேட்டியளித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் அடுத்த புத்தூரில் ம.தி.மு.க செயல்-வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் தலைமையிலும் நகர செயலாளர் ராஜேந்திர சோழன் முன்னிலையிலும் நடைபெற்றது.
    கூட்டத்தில் தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறியதாவது:

    தமிழ்நாடு, குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மின்தடை இருப்பதற்கு காரணம் நிலக்கரி தட்டுப்பாடு, நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படு-வதற்கு காரணம் மத்திய பாஜக அரசுதான்.
     
    நிலக்கரி இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு தடைகளை போட்டது, அதுவே தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணம். பருவமழை பாதிப்பால் தமிழகத்தில் ஏற்பட்ட நெற்பயிர் பாதிப்புகளுக்கு இதுவரை ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை. ஒன்றிய குழு தமிழகத்தில் வந்து ஆய்வு செய்து சென்று 6 மாதங்கள் ஆகிய நிலையிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்ட 7400 கோடி நிவாரண தொகையை இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
     
    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா-மலை ஒரு படித்த இளைஞர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. ஆனால் அவரு-டைய தொலைக்காட்சி பேட்டிகள் அதிர்ச்சி அளிக்கிறது. மின்தடை தொடர்பாக அண்ணாமலை கொடுத்த விளக்கங்கள் அனைத்தும் பொய். பொய்-யான இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அண்ணாமலை கூறி வருகிறார்.

    பா.ஜனதா போன்ற வலதுசாரி அமைப்புகளின் மூலதனமே பொய்தான். பொய்யான தகவல்களை பரப்பி மக்களை மொழியால், இனத்தால் பிரித்து வருகின்றனர்.
     
    சமூக வலைத்தளங்களில் கற்பனைக்கு எட்டாத வகையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தவறான பிரச்சாரத்தில் பா.ஜனதா ஈடுபடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×