என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்
கண் பரிசோதனை மருத்துவ முகாம்
எரவாஞ்சேரியில் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் காரைக்கால் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, கும்பகோணம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் முதியோர்களுக்கான முதியோர் அமைப்பு இணைந்து பொதுநல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் அனுராக் தலைமை தாங்கினார். மேலாளர்கள் மாறன், ரவிக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் வரவேற்றார். முகாமில் பொது மருத்துவம், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி, கண் பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் மருந்து மாத்திரைகள், தேவைப்படுபவர்களுக்கு மூக்குக்கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இதில் முதியோர் அமைப்பு இயக்குனர் இளங்கோ, சி.எஸ்.ஆர் மேலாளர் விஜயகண்ணன், துணைத்தலைவர் சுபைதா ராஜேஷ், ஊராட்சி செயலாளர் மகேந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






