என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை நாகை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து பிளாஸ்டிக் தவிர்த்தல், மாசுபாடு தவிர்த்தல் என்ற கருத்துகளை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசார பேரணி நடத்தினர்.

     பேரணியை நாகை முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஞ்சுகம், வேட்டைக்காரனிருப்பு தலைமையாசிரியர் பீட்டர் பிரான்சிஸ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வீரப்பன், இணைச் செயலாளர் வைத்தியநாதன், செயற்குழு உறுப்பினர் நாகூரான் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் பொய்யாமொழி மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மாணவர்கள் வணிக நிறுவனங்களிலும் வீடுகளிலும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி சென்றனர். விழாவில் தேசிய பசுமைப்படை ஆசிரியர் கண்ணையன் வரவேற்றார் பட்டதாரி ஆசிரியர் ரங்கசாமி நன்றி கூறினார்.

    திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்த மான அக்னீஸ்வரர் கோவிலில் அப்பர் ஐக்கிய விழா நடைபெற்றது. 

    இதில் திருமுறை கருத்தரங்கு மற்றும் நூல் வெளியீட்டு விழாவும் நடைப்பெற்றது.

    வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் தலைமையேற்று ஆசி வழங்கினார்.

     தொடர்ந்து சூரியனார் கோவில் ஆதீனம் மகாசந்நிதானம் ஆசிவழங்கி தொடர்ந்து திருப்புகலூா் தலவரலாறு நூலினை வேளாக்குறிச்சி ஆதீன குருமகாசந்நிதானம் வெளியிட கும்பகோணம் நீதிமன்ற தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி எஸ்.பிரகாஷ் பெற்றுக்கொண்டார். 

    தொடர்ந்து உழவாரப்பணி அரம்பையர் நடனம் மகாஅபிஷேகம் புல்லாங்குழல் இசை சங்கம சமர்ப்பணம் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நாலுவேதபதி பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே நாலுவேதபதி சீனிவாசனார் உயர்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் மற்றும் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. 

    முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் பிளாஸ்டிக்கின் தீமைகளை எடுத்துக் கூறி மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் பள்ளி மாணவர்கள் கொண்டு வந்துள்ள நீரின் தரம் ஆய்வு செய்து விளக்கினார். தேசிய பசுமை படை இன் சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையாசிரியரிடம் பள்ளிக்காக நீர் பரிசோதனை கருவி வழங்கினார். 

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர். சுந்தரபாண்டியன் மரக்கன்றுகள் வழங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். விழா நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் ஆர். பி. உதயகுமார் மற்றும் மூக்காச்சி தெரு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் மா தியாகராஜன் வரவேற்றார். இறுதியாக தேசிய பசுமைப்படை ஆசிரியை சுபா நன்றி கூறினார்.
    டெல்டா மாவட்டங்களில் மழைநீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க தடுப்பணை அமைக்கும் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறினார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் 330 கிலோமீட்டர் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் கிராமத்துமேடு, சோழவித்தியாபுரம், ஆய்மழை உள்ளிட்ட கிராமத்தில் நடைபெற்று வரும் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கூடுதல் தலைமைச் செயலரிடம் விளக்கி கூறினார். 

    அப்போது விவசாயிகள் அனைத்து பாசனவாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் தூர்வார வேண்டும் எனவும், பழுதடைந்த சட்டர் மற்றும் தடுப்பனைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது கூடுதல் தலைமை செயலர் கூறும்போது:-

    காவேரி டெல்டாவில் 10 மாவட்டங்களில் 80 கோடி மதிப்பீட்டில் 4,965 கிலோமீட்டர் நீளத்திற்கு ஆறுகள். கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்கு தடையின்றி விரைவாக சென்றடைய பணிகள் விரைவுபடுத்தப்பட்டு மே மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மழை நீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுக்க தடுப்பணைகள் அமைக்கும் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.
    சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகத்திற்கான பூர்வாங்க பணி தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் சிறு மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசாணை வெளியிடப்படும் என சட்டமன்ற கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

    இதையடுத்து சாமந்தான்பேட்டையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் தொடங்கினர்.

    இதற்காக சாமந்தான்பேட்டை கிராமத்திற்கு எக்கோ சவுண்டர் கருவிகளுடன் வந்த அவர்கள், கடல் முகத்துவாரம் அருகே இரு புறமும் கருங்கல் தடுப்பு சுவர் அமைய உள்ள பகுதியில் படகில் சென்று கடலின் மேல்மட்டத்திலிருந்து ஆழம் வரை அளவீடு செய்தனர். மேலும் கடல் ஆழத்தின் அடியில் உள்ள சேறு மற்றும் மணலையும் அவர்கள் தர ஆய்வுக்கும் எடுத்துக் கொண்டனர்.
    திருமருகலில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் கூட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் தமிழ்நாடு அரசு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படி சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி, முன்னாள் ஒன்றிய தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீராசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
    வேதாரண்யத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் தமிழக அரசு மதுவிலக்கு ஆயத்-தீர்வை மற்றும் விளையாட்டு ஆனணயம் சார்பில் கள்ளச்-சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து துவங்கிய பேரணியை வேதாரண்யம் கோட்டாட்சியர் துரை--முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேரணியில் அரசு கலை அறிவியல் கல்லூரி,

    ஆர்வி கல்வி நிறுவனங்கள் உட்பட அரசு மேல் நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து-கொண்டு முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    பேரணியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கல்லூரி பேராசிரியர் ராஜா உட்பட உடற்கல்வி ஆசிரியர்கள் பாலாஜி, மகேந்திரன், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    வாலிபரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் தீக்குளிக்க முயற்சித்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கோ-கூர் கிராமத்தில் அதே பகுதிகளை சேர்ந்த சிலர் செங்கல் சூளை போடுவதற்கு மணல் எடுத்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், இதுகுறித்து

    அப்பகுதியை சேர்ந்த அம்பேத்கர் என்பவர் கிராம மக்களோடு சேர்ந்து கடந்த 4ம் தேதி நாகை மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் மணல்

    கடத்தல் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்-களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆய்வு செய்ய வந்த வருவாய்த்துறை

    அதிகாரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கர் மணல் கடத்தல் நடைபெறும் இடத்தை நேரில் சென்று காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பு கும்பல் அம்பேத்கர் மீது தாக்குதலில்

    ஈடுபட்டுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அம்பேத்கர் நாகை அரசு தலைமை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் மீது கீழ்வேளூர் காவல்

    நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தீகுளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மணல் கடத்தலில் தொடர்புடைய தாக்குதலில் ஈடுபட்ட கோகூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோபு என்கிற

    கோபாலகிருஷ்ணன், மகேஷ், உள்ளிட்ட கும்பலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் உருண்டு புரண்டு கதறி அழுது போராட்டத்தில்

    ஈடுபட்டனர். இந்நிலையில் இவர்கள் குற்றம் சாட்டும் எதிர்த்தரப்பை சேர்ந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கோபு, மகேஷ், குஞ்சப்பன், தங்கம் உள்ளிட்டோர் திருவா-ரூர் மருத்துவ கல்லூரி

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    திருமருகல் ஒன்றியத்தில் மழையால் உளுந்து பயிர்கள் சேதமடைந்தன.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் உளுந்து, பயறு சாகுபடி  செய்துள்ளனர். குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் குறைந்த அளவு மகசூல்

    கிடைத்தது.இதைதொடர்ந்து உளுந்து மற்றும் பயறு சாகுபடி பணியை திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருமருகல்

    ஒன்றிய பகுதியில் சாகுபடி செய்து அறுவடை நடைபெறும் வேளையில் மழை பெய்ததால் செடிகள் சேதமடைந்து காணப்படுகிறது.இதனால் ஒரு ஏக்கரில் 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்க வேண்டிய

    உளுந்து, பயறுகள் ஒரு ஏக்கருக்கு ஒரு குவிண்டாலுக்கும் குறைவாகவே மகசூல் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை, சம்பா,

    தாளடி சாகுபடியில் இயற்கை சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உளுந்து, பயிறு சாகுபடியை கடன் வாங்கி மேற்கொண்டு வந்தோம். தற்போது பெய்த மழையால் உளுந்து, பயறு

    பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.65 முதல் ரூ.68 வரை கொள்முதல் செய்யப்பட்ட உளுந்து, பயறு தற்போது ரூ.50-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால்செலவு செய்ததை விட மிக குறைந்தளவே

    கிடைக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
    திருமருகல் அருகே மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரம் கோபுராஜபுரம் கிராமத்தில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மண்மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெற்றது.
     
    இந்நிகழ்ச்சிக்கு நாகை வேளாண்மை இணை இயக்குநர் அகண்டராவ் தலைமை தாங்கினார். மண் சேகரிப்பு முகாமை ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் தொடங்கி வைத்து

    சிறப்புரையாற்றினார். இதில் திருமருகல் வேளா-ண்மை உதவி இயக்குநர் (பொ) கலைச்செல்வன் மண்மாதிரி சேகரிக்கும் முறைப்பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். 

    துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் மண்ணில் உள்ள சத்துக்கள் மற்றும் அதனால் பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகளை பற்றி விளக்கி கூறினார். மாவட்ட மண்பரிசோதனை நிலைய

    வேளாண்மை அலுவலர் ஜெயபிரகாஷ் மண்மாதிரி சேகரிப்பு செயல் விளக்கம் செய்து காண்பித்து மண்மாதிரி ஆய்வுக்கு அனுப்பும் முறைப்பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முகம்மது சாக்கீர் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டத்தில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் சிறப்பு தூர்வரும் பணி 2021-யின் கீழ் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பிடாகை, ஆலத்தூர், பனங்காட்டூர், ஆலங்குடிச்சேரி

    மற்றும் மானாம்பேட்ட பகுதிகளில் வடிகால் வாய்க்கால்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன்

    ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டனர். நீர்வளத்துறை காவிரி வடிநில உட்கோட்டம் நன்னிலம் கட்டுப்பாட்டிலுள்ள பாசன பிரிவு எண் ஒன்று திருமருகல் பராமரிப்பில் இருந்து

    வரும் திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, நரிமணியார் ஆறு, ஆறுகள் மற்றும் ஆறுகளில் கலக்கும் வடிகால் பாசன பிரிவு எண் 1 திருமருகல் பராமரிப்பில் இருந்து வருகிறது.  ஆலத்தூர் வடிகால்

    வாய்க்கால் 2 ஆயிரம் மீட்டர் வரை, பனங்-காட்டூர் வடிகால் வாய்க்கால் தொலைதூரம் 2 ஆயிரம் மீட்டர், ஆலங்குடிச்சேரி வடிகால் வாய்க்கால் 4 ஆயிரத்து 500 மீட்டர், தென்பிடாகை வடிகால் வாய்க்கால்

    3 ஆயிரம் மீட்டர் வரை உள்ளது. இவ்வடிகால் வாய்க்கால் மூலம் 656 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பயன் பெறும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காவேரி வடிநில கோட்ட

    செயற் பொறியாளார் சொர்ணகுமார், உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, திருமருகல் திருமருகல் ஒன்றிய ஆத்மா குழுத்தலைவர் செல்வசெங்குட்டுவன், உதவிபொறியார்கள் சரவணண்,

    செல்வகுமார், ஆலத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் லதா அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    திருமருகல் ஒன்றியத்தில் உலக புவி தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புவி தினம் கொண்டாடப்பட்டது. 

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் செல்லம்மாள் தலைமை தாங்கினார். 

    மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

    முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டது. 

    முடிவில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் காட்சன் ஐசக் நன்றி கூறினார்.
    ×